ரசிகர்களிடம் கம்பீர் செய்த செயல்.. விமர்சிக்கும் நெட்டிசன்கள் – கம்பீர் கொடுத்த விளக்கம் இதோ.
ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொ
ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா vs நேபாளம் ஆசிய கோப்பை 2023 போட்டியின் போது இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆசியக் கோப்பை போட்டியின் போது மழை குறுக்கிட்டபோது வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. அப்போது இன்னொரு ஸ்டாண்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைக் கோஷமிடுவதைக் கேட்க முடிந்தது.
இதனால் கம்பீர் எரிச்சலடைந்த போல் தெரிகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் கம்பீர் தனது வலது கையை சட்டைப் பையில் இருந்து வெளியே எடுத்து கூட்டத்தை பார்த்து நடு விரலை காட்டியது தெரிகிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலான நிலையில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரரே இப்படி செய்யலாமா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தான் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் கம்பீர்.
Found the original video
— B` (@Bishh04) September 4, 2023
well done Gambhir 👏👏 pic.twitter.com/crtrbRrrae
பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதால்தான் கம்பீரை நடுவிரலைக் காட்டத் தூண்டியதாக அவர் கூறினார். பாகிஸ்தான் ரசிகர்களால் கூடிய கூட்டம் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களையும் காஷ்மீர் குறித்து கருத்துகளை கூறியதாகவும். ஒரு இந்தியனாக என் நாட்டைப் பற்றி யாரும் இப்படிச் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதனால்தான் இப்படி நடந்துகொண்டேன். சமூக ஊடகங்களில் நீங்கள் பார்ப்பது எப்போதும் சரியான படம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
Gambhir talking about the viral video spreading on social media. [Jagran News] pic.twitter.com/p4OHlGgLvH
— Johns. (@CricCrazyJohns) September 4, 2023
இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே மழை காரணமாக இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது தடைபட்ட நிலையில் இன்று இந்தியா vs நேபாளம் போட்டியில் நேபாளம அணி 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டியானது 23 ஓவர்களில் 145 ரன்கள் டார்கெட் வைக்கப்பட்டுள்ளது.