தோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த அரிதான கேப்டன். இனி அவரை போல் ஒரு கேப்டன் இருக்க முடியாது – கவுதம் கம்பீர் வெளிப்படையான பேச்சு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத உள்ள
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத உள்ளது. போட்டிக்கு முன்னதாக கம்பீர தோனியை குறித்து மனம் திறந்து சில விஷயங்களை பேசி உள்ளார். கம்பீர அவ்வபோது தோனியை பற்றி அதிக அளவில் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். அதிலும் முக்கியமானது என்னவென்றால் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை அணிவதற்கு அணி முழுக்க தான் காரணம் தோனி மட்டுமே காரணம் இல்லை என்றும் அவருக்கு எங்கு எல்லாம் பேச நேரம் கிடைக்குமோ அங்கெல்லாம் அவர் தோனியை விமர்சிக்கும் வகையிலே அவர் பேசிக் கொண்டிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் இவர்கள் இருக்கும் இரு அணிகளும் மோதும் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் கம்பீர் கேப்டன் ஆக இருந்தபோது தோனிக்கு ஸ்லீப் முதலியவற்றை அருகிலே வைத்து அணியின் சிறந்த ஸ்பின்னர்களை போட்டு தோனியை கோபப்படுத்தி விக்கெட்டை வீழ்த்துவார். 2012 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது.
அப்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் சென்னை அணி சொந்த மண்ணிலேயே இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கே கே ஆர் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார் இந்த இரண்டு அணிகளும் என்றும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி உள்ளதால் அதற்கு முன்னதாக ஒரு நேர்காணலில் kkr அணியின் முன்னாள் கேப்டனும் தற்பொழுது மென்டராக உள்ள கம்பீர் கூறுகையில் “எனக்கு ஜெயிக்கணும். என் மனசுல தெள்ளத் தெளிவா இருக்கேன். ஆட்கள் இருக்காங்க, ஆம். நண்பர்கள், பரஸ்பர மரியாதை எல்லாமே வேற. எல்லாமே எப்பவுமே இருக்கும், ஆனா, நீங்க நடுவுல இருக்கும்போது நான் கேகேஆர் கேப்டனா இருக்கேன்.
எப்போதும் போட்டி இருக்கும். எம்.எஸ் அநேகமாக இந்தியாவுக்கு கிடைத்த மிக வெற்றிகரமான கேப்டன். மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்று யாராலும் அந்த நிலையை எட்ட முடியாது என்று நான் நினைக்கவில்லை. வெளிநாட்டில் மக்கள் வெல்ல முடியும், மக்கள் எத்தனை டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியும், ஆனால் அதை விட பெரியதாக இருக்க முடியாது. மூன்று ஐசிசி கோப்பைகள் வென்றுள்ளார். ஐபிஎல்-ல், எம்.எஸ்.க்கு அந்ததந்திரமான மனப்பான்மை இருந்தது என்பதை நான் அறிந்திருந்ததால், அதன் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன். அவர் மிகவும் திறமையானவர், சுழற்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தத் தெரிந்தவர், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக களம் அமைக்கத் தெரிந்தவர்,
Gautam Gambhir talking about the Greatness of MS Dhoni. 👌
— Johns. (@CricCrazyJohns) April 8, 2024
– The GOAT, Dhoni. 🐐pic.twitter.com/LYDfuSMsCe
ஒருவேளை ஒருபோதும் கைவிடமாட்டார். அத்துடன், அவர் 6 அல்லது 7வது இடத்தில் பேட்டிங் செய்தார், அவர் இருக்கும் வரை, ஒரே ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும், அவர் ஆட்டத்தை முடிக்க முடியும் என்று அவருக்குத் தெரியும், ஆனால், அதே நேரத்தில். CSK யில் யாருக்கும் சவால் விடக்கூடிய பந்துவீச்சுத் தாக்குதல் என்னிடம் உள்ளது என்று எனக்குத் தெரியும். தோனி களத்தில் அவ்வளவு ஆக்ரோஷமாக இல்லாததால், அவரை வெல்ல எல்லா விஷயங்களிலும் அவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பது எப்போதும் தெரியும் என்று அவர் கூறினார்.