40 பந்துகளில் நான் ஓரு ரன் எடுப்பேன்.. ஆனால் மேக்ஸ்வெல் சதம் அடிக்கிறார் – பாராட்டிய சுனில் கவாஸ்கர்
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடத்து முடிந்தது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் 399 ரன்கள் குறித்து இருந்தனர். இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியால் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் 9௦ ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்கள் வித்தியசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. இது 48 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி இது ஆகும்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா விளையாடி கொண்டிருந்த போது 244/2 என்ற நிலையில் மார்னஸ் லாபுசாக்னே அவுட் ஆனபோது ஆஸ்திரேலியா கொஞ்சம் நழுவி 267/5 ஆனது. ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடினாலும் விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. அவர் ரன்களை எடுக்க வேண்டியிருந்தது நிலையில் களமிறங்கிய மேக்ஸ்வேல் அதிரடியாகவே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தார்.
சொல்லப்போனால் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஆனால் அதோடு நின்று விடாத அவர் தொடந்து அதிரடியாக விளையாடி வெறும் 40 பந்துகளில் சதம் விளாசி, உலக கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் மேக்ஸ்வெல். மேலும் அவர் அந்த போட்டியில் 8 சிக்ஸர்கள் உள்பட 9 போர்களை விளாசினார்.
இந்நிலையில் இவருடைய ஆட்டத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “மேக்ஸ்வெல் அடித்த அந்த ரிவர்ஸ் ஹிட் மிகச்சிறந்த கிரிக்கெட் ஷாட்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த ஷாட் ஒரு சிக்ஸருக்குப் போய்விட்டது. எனவே 12 ரன்களாக ஆக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு சற்று தடுமாறியது, ஏனென்றால் அவர்களுக்கு எங்கு பந்து வீசுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
இது ஒரு நம்பமுடியாத முயற்சி என்றே நான் கூறுவேன். அவர் ரன்களை அடிக்க சராசரியாக 12 இருந்தது. அவர் செய்த அந்த செயல் மற்றும் அவருடைய செய்த விகிதத்தில் ஆச்சரியமாக இருந்தது. நான் ஒரு ரன் எடுக்கவே 40 பந்துகளை எடுத்தேன். ஆனால் அவர் 40 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அது மிகவும் அற்புதமான ஓன்று என கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.