ரஜினிகாந்திற்கு ஓகே.. இந்த முன்னாள் வீரர்களுக்கும் தங்க டிக்கெட் கொடுங்க – கவாஸ்கர் கருத்து.

அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எத

By ·

அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்த்து காணப்படுகிறது. மேலும் இந்த தொடர் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் பரபரப்பு இமயத்தை தொட்டுள்ளது

இந்த நிலையில் தான் இந்த போட்டிகளுக்கான மைதானங்கள் விளையாடும் அணிகள் என அனைத்தும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதை நேரில் சென்று மைதானத்தில் அமர்ந்து காண்பதற்காக டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே படாத பாடு பட்டு வருவதை சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆன்லைனில் 2 மணி நேர முதல் 24 மணி நேரங்கள் காத்திருந்தாலும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அந்த நிலைமையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த உலகக் கோப்பையை காண்பதற்கான தங்க டிக்கெட்டை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரில் வழங்கினார். அத்துடன் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் போன்ற திரைப்பட நடிகர்களுக்கும் அதை கொடுத்து வரவேற்ற அவர் இன்னும் சில நட்சத்திரங்களுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இன்று கிரிக்கெட் ஆலமரமாக வளர்ந்து நிற்க முக்கிய காரணமான 1983 உலக கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ் மற்றும் 2011 உலக கோப்பையை வென்ற எம்எஸ் தோனி ஆகியோருக்கு மறக்காமல் தங்க டிக்கெட் கொடுங்கள் என்று பிசிசிஐக்கு சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இஸ்ரோ தலைவர் ஆகியோரை மறக்காதீர்கள் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

அவர் கூறுகையில் “பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதில் அமிதாப்பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் உலகக் கோப்பையை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பெற்றனர். அந்த பட்டியலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இருப்பினும் இந்தியாவை நிலவுக்கு அழைத்துச் சென்ற இஸ்ரோ தலைவர், 2 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த கபில் தேவ் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதே போல அந்த டிக்கெட்டை நினைத்தாலே ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பெயரும் எனக்கு முதலாவதாக தோன்றுகிறது” என கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை