கோலி மட்டுமே எவ்வளவுதான் சமாளிப்பார் – RCB அணியை கடமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு கடந்த 9 ஆண்டுகளாக கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் மோதிய போது எல்லாப் போட்டுகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியில் கொல்கத்தா அணியின் கைகளே எப்போதும் ஓங்கி இருகின்றது. அதே தான் இன்றும் மீண்டும் நடந்துள்ளது. இந்த போட்டியானது ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக செல்லும் ஏனென்றால் கொல்கத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் கடும் போட்டி இருக்கும் என பல ரசிகர்கள் போட்டிக்கு முன்பாக இணையத்தில் பரப்பி வந்தனர். ஆனால் இன்று போட்டி முற்றிலும் மாறாகவே மாறியது. இந்த போட்டியில் பாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.
அது கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக அமைந்தாலும் போட்டி போக போக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் விராட் கோலிக்கு ரன்களை வாரி வழங்கி வந்தனர். பெங்களூர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை அடித்தது. அதில் அதிகபட்சமாக கிங் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்சர்களையும் அவர் அடித்து இருந்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சொலிக்கவில்லை.
இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் வீரர்கள் சுலபமாகவே இந்த இலக்கை எட்ட 16.5 ஓவர்களிலேயே இந்த இலக்கை எட்டினர். இதனால் கடந்த 10 வருடங்களில் பெங்களூரு அணியை சின்ன சாமி மைதனத்தில் வீழ்த்தியுள்ளனர். மேலும் இந்த தோல்விக்கு பீல்டிங் மற்றும் பந்துவீச்சு ஒரு காரணமாக இருந்தாலும் பேட்டிங்கில் RCB அணியின் நட்சத்திர வீரர்கள் சொதப்பியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
அவர் கூறுகையில் “கோலி மட்டும் எவ்வளவு தான் RCB அணிக்காக செய்வார் என்று நீங்கள் சொல்லுங்கள்? யாராவது அவருக்குத் துணையாக வர வேண்டும். இன்று நடந்த போட்டியில் யாராவது அவருக்கு ஆதரவளித்திருந்தால், அவர் நிச்சயமாக 83 ரன்களுக்குப் பதிலாக 120 ரன்கள் எடுத்திருப்பார். எனவே கிரிக்கெட் என்பது ஒரு டீம் ஸ்போர்ட் ஒரு மனிதனின் விளையாட்டு கிடையாது. இன்று விராட் கோலிக்கு ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் சுனில் கவாஸ்கர்.
மேலும் இந்த போட்டிக்கு முன்னதாக கோழி vs கம்பீர் என இருவருக்கும் இடையே எதாவது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு காரணம் இருவருமே மைதானத்தில் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இதற்கு கமெண்ட் செய்த சுனில் கவாஸ்கர் கூறுகையில் “இதற்கு பேர் பிளே விருது மட்டுமே கொடுக்க கூடாது. ஆஸ்கர் விருதும் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் கவாஸ்கர்.