நல்ல வாய்ப்பு கிடைச்சுது.. சஞ்சு சாம்சன் விட இவரே பரவாயில்லை – ஓப்பனாக விமர்சித்த கவாஸ்கர்.

இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும

By ·

இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துவே போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மூத்த வீரர்கள் இன்னமும் அணியில் இருந்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியதான் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவே கேப்டனாக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியானது நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து வெளியேற ரோஹித் சர்மா 19 பந்துகளை 23 ரன்களை எடுத்தது.

பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் ரன்களை அடிக்க இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. மேலும் சிறப்பாக பந்துவீசி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இருந்த போதிலும் இந்திய அணியின் பேட்டிங் பலர்க்கும் அதிர்பதியை கொடுத்துள்ளது. மேலும் தொடக்கத்திலேயே சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் அடியாக இருந்தது. இந்நிலையில் தான் சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர்.

அவர் கூறுகையில் : விக்கெட் கீப்பிங் திறமையை ஒப்பிட்டுப் பார்த்தால் சாம்சனை விட ரிஷப் பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் என்று நான் நினைக்கிறேன். நான் இங்கே பேட்டிங் பற்றி பேசவில்லை. இருந்தாலும் போட்டியில் பேட்டிங் அம்சமும் செயல்பாட்டுக்கு வருகிறது. ஆனால், கடந்த சில போட்டிகளில் ரிஷப் பந்த் சிறப்பாக பேட்டிங் செய்தார். மறுபுறம் சஞ்சு சாம்சன் ஐபிஎல் சீசனை அருமையாகத் தொடங்கினார், விரும்பியபடி ரன்களை அடித்தார் பந்தை மைதானத்தின் எல்லா மூலைகளிலும் அடித்தார்.

ஆனால் ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு-மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் அவர் சரியாக ரன்களை எடுக்கவில்லை. எனவே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவருக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அவர் 50-60 ரன்கள் எடுத்திருந்தால் இங்கே கேள்வியே இருக்காது. இதனால் ரிஷப் பண்ட் கீப்பராக இந்திய தேர்வுக் குழு கவனிக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார் கவாஸ்கர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை