இந்த வீரர் தான் நியூசிலாந்துக்கு எதிரா சதம் அடிக்க போறாரு – சுனில் கவாஸ்கர் கணிப்பு.

உலக கோப்பை 2023 தொடரின் இறுதி கட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று இந்தியா vs நியூசிலாந்து போட்டியானது தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி உலக கோப்பை 2023 இறுதி போட்டிக்கு செல்லும். ஆனால் பலரது ஒரு பயமே அரையிறுதி போட்டிதான். ஏனென்றால் கடந்த 2019 உலக கோப்பை போட்டியி

By ·

உலக கோப்பை 2023 தொடரின் இறுதி கட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று இந்தியா vs நியூசிலாந்து போட்டியானது தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி உலக கோப்பை 2023 இறுதி போட்டிக்கு செல்லும். ஆனால் பலரது ஒரு பயமே அரையிறுதி போட்டிதான். ஏனென்றால் கடந்த 2019 உலக கோப்பை போட்டியிலும் இந்தியா அணி நியூசிலாந்து அணியை ஏந்திக்கொண்டு யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சோகமான தோல்வியை தழுவியது.

மேலும் அதில் தோனி அவுட் ஆனதை இன்னமும் யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் அந்த மாதிரியான சூழ்நிலை இந்த நேரத்தில் ஏற்பட கூடாது என்று பலரும் வெடிகொள்கின்றனர். அதே நேரத்தில் அப்போது இருந்த அணி வேறு இப்போது இருந்த அணி வேறு என்பதினால் இந்த முறை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்பார்கப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் இந்தியா அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த அரையிறுதி போட்டியில் சுப்மன் கில் சதம் அடிப்பார் என்று கணித்துளார். அவர் கூறுகையில் “பெரும்பாலான நேரங்களில் பேட்டிங் செய்வதற்கு மும்பை சொர்க்கமாக இருக்கும். எனவே இந்தியா முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, இரண்டாவதாக இருந்தாலும் சரி, ஷுப்மான் கில் சிறப்பான தொடக்கத்தை பெறுகிறார், அப்போது அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சுபமன் கில் 50 ரன்கள் எடுத்து மட்டுமே பெரும்பாலாக ஆட்டமிழப்பது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் அவருக்கு சதங்கள் எடுக்க வேண்டும் என்றே பசி நன்றாகவே இருக்கிறது. இந்த வருடத்தில் அவர் ஏற்கனவே 5 சதம் அடித்துள்ளார். ஒருவேளை தன்னுடைய திறமையை காட்ட கடைசி தருணங்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

அவர் மிகவும் சிரமப்பட்டார், நோய்வாய்ப்பட்டார். ஐந்து கிலோ எடை குறைந்த அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை ஆனால் தற்போது விளையாட வாய்ப்பு கிடைத்தது. அவர் தொடக்கத்தில் அவுட் ஆனார். ஆனால் அதிலிருந்து மிக சிறப்பாக மீண்டும் வந்தார். மேலும் அவர் அடித்த அந்த 92 ரன் மிகவும் அருமையாக இருந்தது.

அவர் ஒரு உன்னதமான பேட்டர். அவர் பந்துக்காகக் உடலுக்கு அருகே வறட்டு காத்திருந்து விளையாடுகிறார். அவர் தனது பேட்டை முன்னோக்கி வீசுவதில்லை. நியூசிலாந்துக்கு எதிராக நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக சரியாக இருக்க வேண்டும், கில் அந்த வேலையைச் செய்ய முடியும். அவருக்கு ஃபார்மும் உள்ளது, வான்கடே போன்ற பவுண்டரி ஆடுகளங்களில் அவர் சிறப்பாக விளையாடுவர் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை