சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை – அயர்லாந்துக்கு எதிராக கவாஸ்கர் தேர்வு செய்த இந்திய அணி.
ஐபிஎல் போட்டியானது முடிவடைந்த நிலையில் தற்போது 2024 டி20 உலக கோப்பை போட்டியானது தொடங்கி இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் பயிற்சி போட்டியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி போட்டியில் இந்திய அவ்வளவு சரியாக பேட்டிங் செய்தது போல் தெரியவில்லை. இருந்த போதிலும் பங்கள
ஐபிஎல் போட்டியானது முடிவடைந்த நிலையில் தற்போது 2024 டி20 உலக கோப்பை போட்டியானது தொடங்கி இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் பயிற்சி போட்டியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி போட்டியில் இந்திய அவ்வளவு சரியாக பேட்டிங் செய்தது போல் தெரியவில்லை. இருந்த போதிலும் பங்களாதேஷ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக சஞ்சு சாம்சன் சொற்பப் ரன்களில் ஆட்டமிழந்தது வெளியேறினார். இந்நிலையில் இதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் மீண்டும் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்த அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.
மேலும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு சாம்சனை விட ரிஷப் பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் என்றும். கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பிக்க தொடங்கிய சஞ்சு சாம்சன் பின்னர் மோசமாக இறுதி கட்டத்தில் சொதப்பியதையும் விமர்சித்திருந்தார். மேலும் தன்னை நிரூபிக்க சிறந்த வாய்ப்பு கிடைத்த போதும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் கவாஸ்கர். இந்நிலையில் தான் நாளை நடக்க இருக்கும் இந்திய vs அயர்லாந்து போட்டியில் தன்னுடைய அணி அணி குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் : அணிகளைத் தேர்ந்தெடுப்பது எனக்குப் பொதுவாகவே பிடிக்காது. ஏனென்றால் உங்களால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. யாரோ ஒருவருக்குப் பிடித்தமான வீரர் எப்போதும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பார் என்றார் சுனில் கவாஸ்கர். மேலும் அவர் தேர்தெடுத்த வீரர்கள் பட்டியலையும் கூறியிருந்தார் கவாஸ்கர்.
சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்த அணி : கேப்டனாக ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மேலும் கடந்த ஐபிஎல் போட்டியில் அற்புதமாக விளையாடிய சஞ்சு சாம்சன், ஆக்சர் படேல் மற்றும் யூஸ்வேந்திர சாஹல் போன்றவர்களை கவாஸ்கர் தேர்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SunilGavaskar opts for experience with @imVkohli & @ImRo45 at the 🔝
— Star Sports (@StarSportsIndia) June 4, 2024
A surprise inclusion at number 3, plenty of batting options and two pacers! 😮
What changes would you make to this team?
📺 | #INDvIRE | 5th June, 6 PM | #T20WorldCupOnStar pic.twitter.com/6hQx6EJmhD
இந்நிலையில் நாளை நடக்கும் போட்டியானது சமீபத்தில் இந்தியா பயிற்சி ஆட்டம் விளையாடிய அதே நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் தான். எனவே இந்திய அணிக்கு கொஞ்சம் சாத்தகமான சூழ்நிலை இருக்கும். இருந்த போதிலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் திருப்திகரமாக இல்லாத நிலையில் நாளை நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பை 2024 தொடரில் தன்னுடைய கணக்கை தொடங்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.