ஒரிஜினல் கேப்டன் கூல் தோனி கிடையாதா? – முன்னாள் ஜாம்பவான் பெயரை கூறும் சுனில் கவாஸ்கர், யார் தெரியுமா?
கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. 60 ஓவர்கள் கொண்ட அந்த போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் களமிறங்கி மோசமாக சொதப்பியது. தொடக்க பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் 2 ரன்களில் வெளியேறிய மற்ற பேட்ஸ்மேன்களும் 50 ரன்களை தாண்டவில்லை. ஸ்ரீகாந்
கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. 60 ஓவர்கள் கொண்ட அந்த போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் களமிறங்கி மோசமாக சொதப்பியது. தொடக்க பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் 2 ரன்களில் வெளியேறிய மற்ற பேட்ஸ்மேன்களும் 50 ரன்களை தாண்டவில்லை. ஸ்ரீகாந்த் மட்டும் 57 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். ஆனால் அவரும் மரசெல்லிடம் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் இந்த இலக்கை இரண்டு முறை சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அல்வா சாப்பிடுவது போல என்று அனைவரும் நினைத்தார்கள். ஏனென்றால் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்தார்கள். இந்நிலையில் போட்டி தொடங்கியது 3 வது விக்கெட் 50 ரன்கள் எடுத்த பிறகுதான் விழுந்தது. இதனால் இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மொத்தமாக சரிந்த நிலையில் பெரிய அதிசயம் நடந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிச்சர்டின் விக்கெட்டை மதன் லால் பந்து வீச கபில் தேவ் அற்புதமான கேட்ச் மூலம் வீழ்த்தினார். அதுதான் இந்தியாவின் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமளவென விழுக தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எதுவும் எடுக்க முடியாமல் ஆட்டமிழக்க இந்தியா அசாதரணமாக 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அது நடந்து 50 வருடங்கள் ஆகிய நிலையில் இன்று அப்போது இருந்த அணியின் வீரர்கள் மீண்டும் சந்தித்தனர்.
சுனில் கவாஸ்கர் கூறியது :
அப்போது பேசிய சுனில் கவாஸ்கர் கூறுகையில் “கபில் தேவ் பந்துவீச்சாக இருந்தாலும் சரி பேட்டிங்காக இருந்தாலும் சரி அதிரடியாக விளையாடுவார். உலக கோப்பை இறுதி போட்டியின் போது அவர் பிடித்த சார் விவ் ரிச்சர்ட் கேட்சை யாரும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட மாட்டார்கள். அவருடைய கேப்டன்சி சூழ்நிலைகளுக்கு தகுடன்ஹாவாறு மிகவும் அற்புதமாக இருக்கும், அதுதான் அப்போது தேவைப்பட்டது. மேலும் அவர் மைத்தனத்தில் சிரித்த முகமாக யாரின் மீதும் கோபம் கொல்லாமல் இருந்தார்.
ஒரு கேட்சை விட்டாலும், பில்லிடிங்கில் சில குறைபாடு இருந்தாலும் கூட அவருடைய முகம் சிரித்தபடிதான் இருந்தது. அதுதான் அவரை உண்மையான கேப்டன் கூலாக மாற்றியது என்றார் கவாஸ்கர். மேலும் அப்போது நடந்த சில நகைச்சுவையான நிகழ்வுகளையும் அந்த பேட்டியின் போது பகிந்து கொண்டார். அது பற்றி கூறுகையில் “நாங்கள் வெற்றி பெற்றதும் கிடைத்த அந்த அனுபவத்தை எங்களினால் வார்த்தைகளினால் சொல்ல முடியாது.
வெற்றி பெற்றவுடன் எங்களை சுற்றியும் மகிழ்ச்சியும், சிரிப்புமாக இருந்தது, அது டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் சுனில் கவாஸ்கர். கடந்த 1983 ஆம் ஆடுனு ஜூன் மாதம் 25ஆம் தேதி இந்திய அணி வரலாற்று சிறப்பவுமிக்க உலககோப்பை வென்றது. அது நடந்து இன்றுடன் 40 வருடங்களாகிறது, காலம் கடந்து விட்டாலும் அந்த நிகழ்வு கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இருந்து எப்போதும் நீங்காது..