இந்திய அணி வெற்றி பெற்றதால் ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டன் கிடையாது. அதே போல் ஸ்டோக்ஸ் மோசமான கேப்டன் கிடையாது – கிரேம் ஸ்வான்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது சில தினங்களுக்கு முன் தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவ
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது சில தினங்களுக்கு முன் தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கினார்கள் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ராலி 69 ரன்களையும் பேர்ஸ்டோ 29 ரன்களையும் ஜோ ரூட் 26 ரன்களையும் அடித்திருந்தனர். இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்.அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை அடித்து இருந்தனர்.
அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்ததளிதது. அதில் ரூட் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து கொண்டு இருந்தார். மறுபக்கம் அவருக்கு போதுமான அளவிற்கு சப்போர்ட் கிடைக்கததால் இங்கிலாந்து அணி 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது
இந்திய அணியின் வெற்றி குறித்து கிரேம் ஸ்வான் கூறுகையில், ரோஹித் ஷர்மா சிறப்பான கேப்டன் கிடையாது என்று நான் நினைக்கின்றேன். என்னை தவறாக எண்ண வேண்டாம். ரோஹித் ஷர்மாவுக்கு அனைத்தையும் பந்துவீச்சாளர்களே செய்து முடித்து விட்டனர். ஆனால், ஸ்டோக்ஸ் மோசமாக கேப்டன் கிடையாது.ரோஹித் ஷர்மாவின் பந்துவீச்சாளர்கள் உண்மையிலேயே சிறப்பாக விளையாடி இருந்தனர். அவர்கள் முதல் போட்டியில் செய்யவில்லை, ஆனால் கடைசி நான்கு போட்டிகளில் அவர்கள் செய்திருக்கிறார்கள்” என்று ஸ்வான் குறிப்பிட்டார்.