ஹர்திக் பாண்டியா குறித்து அனைத்து சர்ச்சைகளுக்கும் முடிவு வைத்த குஜராத் அணி. அதிரடியான முடிவு.
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத்
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.
அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது. குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை.
2023 ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணியின் உரிமையாளருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அதனை அடுத்து அவர் அணியை விட்டு விலக முடிவை அப்போதே எடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை அப்போது அணியில் இருந்து மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டது என்று அம்பானி தரப்பில் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. ஏலம் இல்லாமல் இது போன்ற அணியில் இருக்கும் வீரரை மற்றொரு அணிக்கு மாற்றம் செய்யும்போது அதற்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி குஜராத் அணிக்கு அளிக்க வேண்டும் என்று தளவல்கள் வெளியாகி இருந்தது.
அந்த வீரரின் மதிப்பு போக மீதி பணத்தை ஈடாக கொடுக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா குஜராத்த அணிக்கு செல்வார் என்று சில ரூமர்கள் கிளம்பி வந்தது ஆனால் அது நடக்க வாய்ப்பு குறைவு தான். மும்பை அணி பாண்டியாவிற்கு 15 கோடி ரூபாயை பணமாக கொடுத்து அவரை மும்பை அணிக்கு விளையாட வருவார் செல்வதற்காக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது குஜராத் அணியை சுப்மான் கில் வழி நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இது அனைத்திற்கும் இன்று குஜராத் அணி முற்றுபுள்ளி வைத்துள்ளது. இன்று அணைத்து அணிகளும் யார் யாரை தக்க வைத்து கொண்டு யார் யாரை அதில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக வைத்துள்ளது அதன் படி அணைத்து சர்ச்சைகளும் தற்போது முடிவடைந்துள்ளது. இருப்பினும் டிசம்பர் 12 வரை அணிகள் Window Trade செய்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.