ரோஹித் சர்மாவிற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா கேப்டன் கிடையாதா? குர்பாஸ் கூறும் ஆச்சரிய கருத்து.
வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது இந்த வருடம் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் கடந்த 2011 உலக கோப்பை போல வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. அதே சமயம் இந்தியாவின் பேட்டிங் ஆர்ட்டரிலும்
வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது இந்த வருடம் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் கடந்த 2011 உலக கோப்பை போல வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. அதே சமயம் இந்தியாவின் பேட்டிங் ஆர்ட்டரிலும் சில திருத்தங்களை அதிரடியாக செய்து வருகிறது இந்திய அணியின் நிர்வாகம்.
அதனாலேயே மிகவும் தாமதமாகத்தான் ஆசியு கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. ஏனென்றால் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் பங்குபெற அதிக வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வீரர்கள் பட்டியலில் காயம் அடைந்து குணமாகிய வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.
மேலும் அயர்லாந்து தொடரில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அனுமதிக்கப்பட்டார். மேலும் வரும் ஆசிய கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் துணை கேப்டனாக மட்டுமே நியமிக்கப்பட்டார். இதற்கு சிலர் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை குறிவரும் நிலையில் தான் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் ரோஹித் ஷர்மாவிற்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயற் தான் இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் “நம்பிக்கையுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு நல்ல கேப்டனாக மாறுவார். ஐபிஎல்லில் ஒரு அணியை கேகேஆர் அவர் வழிநடத்துவதால் அவர் ஒரு நல்ல கேப்டனாக இருப்பார். ஐபிஎல் உலகின் மிகப்பெரிய போட்டியாகும். ஐபிஎல்லில் ஒரு அணியை வழிநடத்த முடியுமானால். அவர் உலகின் எந்த அணியையும் வழிநடத்த முடியும். இந்திய அணிக்கு இப்போது ரோஹித் இருக்கிறார்.
இந்தியாவின் கிரிக்கெட் தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. ஐபிஎல்லில் ஸ்ரேயாஸ் ஒரு அணியை வழிநடத்துகிறார் என்றால்,அவர் நல்லவர் இந்திய கேப்டன்சி மெட்டீரியலாக அங்கே இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அணிகளை வழிநடத்தும் வாய்ப்பை பெறாத பல வீரர்கள் உள்ளனர். அவருக்கு வாய்ப்பு கிடைத்தது இதிலிருந்தே தெரிகிறித்து அவர் ஒரு நல்ல கேப்டன் என்று. அவர் இந்தியாவுக்கு சிறந்த கேப்டனாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைத்து விளையாடுவதில் க்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் அணிக்கு வந்துள்ளார். அவர் ஒரு முக்கிய வீரர். அவர் மிகவும் நல்ல வீரர். அதனால்தான் அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தகுதியானவர். அது. நாங்கள் KKR இல் ஒன்றாக விளையாடுகிறோம். அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் மிகவும் நல்ல இளம் கேப்டன். மேலும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்” என்று குர்பாஸ் கூறினார்.