நாங்க தோக்கணும் ஆப்கானிஸ்தான் ஜெயிக்கணும்னு திட்டம் போடுறாங்க – பாக் வீரர் அதிர்ச்சி கருத்து.

இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா அணிக்கு முதல் போட்டியே சவாலானதாக இருந்தது. ஏனென்றால் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது, இந்த போட்டி நடந்த சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால

By ·

இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா அணிக்கு முதல் போட்டியே சவாலானதாக இருந்தது. ஏனென்றால் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது, இந்த போட்டி நடந்த சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால் இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை 200 ரங்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.

மேலும் இதற்கு அடுத்த நடந்த நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் போட்டியும் இங்கு நடந்த நிலையில் , ஆப்கானிஸ்தான் அணியிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தும் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனையடுத்து பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியும் இங்கேயே நட்பதினால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சில இதற்கு கருத்து தெரிவித்தனர். இதற்கு பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் தன்னுடை கருத்தை கூறியிருந்தார்.

அவர் பேசுகையில் “பாகிஸ்தானுக்கு சில நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட மைதானம் கொடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் வேறு எதற்கும் கொடுக்காமல் பாகிஸ்தானின் ஒரு ஆட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இந்த மைதானமானது இது பாகிஸ்தான் அணிக்காக பயன்படுத்தப்படாது என்று குற்றம் சாட்டினார்.

இதிலிருந்தும் அவர் இந்த மைதானத்தை வேண்டுமென்றே பாகிஸ்தான் போட்டிக்காக வைத்திருந்ததாக மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமான மைதானமாக இருந்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியிடம் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதினால் வேண்டுமென்றே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இப்படி செய்துள்ளதாக பாகிஸ்தான் நிர்வாகம் முன்பே குற்றம் சாடியிருந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி கூறுகையில் “இந்த மைதானம் நாங்கள் நினைத்தது போல சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை என்றும் கடந்த 18ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது மைதானம் போல இது தெரியவில்லை என்று உண்மையை உடைத்திருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை