என்னை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள் என்றே தெரியவில்லை – புலம்பும் நட்சத்திர வீரர்.
இந்திய டெஸ்ட் அணியின் வெளியூர் சுற்றுப்பயணங்களில் மிடில் ஆர்டர் பேட்டராக இருந்தவர் ஹனுமா விஹாரி. ஆனால் இவர் இன்று நடக்கும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் விளையாடும் அணியில் இல்லை. 29 வயதான விஹாரி 16 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்த
இந்திய டெஸ்ட் அணியின் வெளியூர் சுற்றுப்பயணங்களில் மிடில் ஆர்டர் பேட்டராக இருந்தவர் ஹனுமா விஹாரி. ஆனால் இவர் இன்று நடக்கும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் விளையாடும் அணியில் இல்லை. 29 வயதான விஹாரி 16 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்காக அவர் ஆடிய கடைசி போட்டி இருந்தது.
அதன்பிறகு விஹாரி டெஸ்ட் அணியில் பரிசீலிக்க படவில்லை. இந்நிலையில் அவர் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஹனுமா விஹாரி. நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக அணியில் இருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அணியில் இணைவது என்பது மிகவும் கடுமையான ஒரு விஷயம். ஏனென்றால் உங்களுடைய மனநிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். அதே போலதான் நானும் கடந்த சீசன் பாதிக்கப்பட்டேன். அதனால் இந்த முறை எல்லாவற்றையும் தவிர்ந்து என்னுடைய பேட்டிங்கை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
என்னுடைய கடந்த காலங்களில் நான் என்ன செய்தேனோ அதைத்தான் இப்போது மேலும் சிறப்பாக செயல்பாடு வருகிறேன். இந்த உழைப்பு எனக்கு வெற்றியை தரும் என்று நினைக்கிறேன். எனக்கு இந்திய எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ எப்போதெல்லாம் என்னை நாம் நிரூபிக்க எண்ணுகிறேன். ஒருவேளை நான் சிறப்பாக செயல்பட்டும் அது அணிக்கு போதவில்லை என்று நினைக்கிறேன் என்றும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
மேலும் சமீபத்தில் இந்த விஷயம் குறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த ஹனுமா விஹாரி கூறுகையில் “எனக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நான் ஏன் நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது மட்டுமே என்னைத் தொந்தரவு செய்தது. யாரும் என்னைத் தொடர்புகொண்டு நான் நீக்கப்பட்டதற்கான காரணங்களை என்னிடம் சொல்லவில்லை.
இதற்கு சிறிது நேரம் பிடித்தது நான் என்னுடைய கிரிக்கெட்டி வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்தித்தேன். நான் இப்போது அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் எனது தனிப்பட்ட விஷயங்களை ஒதுக்கிவிட்டேன் நான் இந்திய அணியில் இருக்கிறேனா இல்லையா என்பதில் அதிக மன அழுத்தத்தை எடுக்கவில்லை. வெற்றிபெற மற்ற போட்டிகள் உள்ளன. அதிலும் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்து வருகிறேன் என்றார் ஹனுமா விஹாரி.