நான் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தால் பிரித்வி ஷாவவை அடித்திருப்பேன் – ஹர்பஜன் சிங் காட்டம்.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லக்னோ அணிக்கும் டெல்லி அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு வெற்றி முக்கியம் என்பதினால் கடுமையாக போராடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய அது அவர்கள

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லக்னோ அணிக்கும் டெல்லி அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு வெற்றி முக்கியம் என்பதினால் கடுமையாக போராடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய அது அவர்களுக்கு சரியாக போகவில்லை. தொடக்கமே விக்கெட் விழுக கேஎல் ராகுல் மட்டும் நிலையாக நின்று விளையாடினர். ஆனால் பின்னர் அவரையும் 39 ரன்களில் ஆட்டமிழக்க. ரன்களை எடுக்க தடுமாறிய லக்னோ பதொனியின் பொறுப்பான ஆட்டத்தினால் 167 ரன்களை எடுத்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கத்தில் கொஞ்சம் சொதப்பி தடுமாறியது. குறிப்பிட தக்க வகையில் அணியின் தொடக்க வீரர் வார்னர் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாட வேண்டிய ப்ரித்வி ஷா மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். இது அணியின் தோல்விக்கு காரணமாக அமைய வாய்ப்பிருந்தது. மேலும் இடையே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் தான் பொறுமையாக விளையாடிவந்த ரிஷப்-மெக்குர் அடுத்த பந்தின் கேட்சை விட்டனர் லக்னோ. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர் அடுத்த ஓவர் அதிரடியாக விளையாடி தொடந்து 3 சிக்ஸர்களை அடித்தார். இறுதியில் டெல்லி அணி 18.1 ஓவர்களில் 170 ரன்களை எடுத்து போட்டியை வென்றது. இந்நிலையில் டெல்லி அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா குறித்து மீண்டும் கருத்துக்களை கூற தொடங்கியுள்ளனர் கிரிக்கே வல்லுநர்கள்.

ப்ரித்வி ஷா ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் தான். ஆனால் தனது விக்கெட்டை சுலபமாக எதிராணியிடம் பறிகொடுப்பதினால் அவருக்கு இந்திய அணியில் கிடைக்க இருந்த வாய்ப்பு கைதவறி போனது. ப்ரித்வி ஷா அனைத்து ஷாட்களையும் விளையாடுவார். மேலும் உலகில் எந்த பந்துவீச்சு தாக்குதலிலும் அவரினால் ஆதிக்கம் செலுத்த முடியும், ஆனால் அவர் அதிக ஷாட்களுக்கு செல்கிறார். இதனால் அவர் தன்னுடைய விக்கெட்டை இழக்கிறார். இது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஐபிஎல் 2024 போட்டியிலும் இதேதான் நடந்தது.

ப்ரித்வி ஷா 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று சிறப்பான ஆட்டத்தை காட்டப்போகிறார் என்பது போல தோன்றியது. ஆனால் ரவி பிஷ்னோய்க்கு எதிராக பொறுப்பற்ற முறையில் விளையாடி நிக்கோலஸ் பூரணிடம் கேட்ச் ஆனார். அவர் அப்போது ஆறு பவுண்டரிகளை அடித்து நிலையான 145.45 ஸ்ட்ரைக் ரேட்டில் இடுந்தார். இந்நிலையில் தான் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில் :பிரித்வி ஷா அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்? நான் மட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்திருந்தால், நான் அவரை தொடர்ந்து அடித்திருப்பேன். அந்த ஷாட் தேவையில்லை, அந்த ஷாட் டெல்லி அணியை சிக்கலில் தள்ளினார். நீங்கள் நன்றாக பேட்டிங் செய்யும்போது ​​​​அதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால் ப்ரித்விக்கு இந்த பழக்கம் உள்ளது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை