ரோஹித் மற்றும் கோலியை விட இவர் சிறப்பாக பேட்டிங் செய்வார் – ஹர்பஜன் சிங் பாராட்டு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.
முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் உலக கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சூரியகுமார் யாதவிர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் டி20 கிரிக்கெட் போட்டியில் சூரியகுமார் யாதவ் ஜாம்பவான் வீரராக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் கொஞ்சம் நிலைதன்னைமை இல்லாதவராக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.
சூரியகுமார் யாதவ் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். அவரால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் பெறாமல் போனது தேர்வுக்குழு செய்த தவறில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன். அவரால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களை விட மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். அவருடைய ஒரு நாள் போட்டிகளுக்கான புள்ளி விவரங்கள் சரியாக இல்லை என்று கூறினாலும் அவரை போன்ற சிறப்பான பேட்ஸ்மேன் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.ஹர்பஜன்
ஏனெனில் தற்போது இந்திய அணியின் பேட்டிங்கில் பலமாக பார்க்கப்படும் வீரர்களான சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை விட சூரியகுமார் யாதவ் சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அவரால் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே என்னை பொருத்தவரை அவரை இந்திய அணியில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறினார்.
ஏனெனில் தற்போது இந்திய அணியின் பேட்டிங்கில் பலமாக பார்க்கப்படும் வீரர்களான சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை விட சூரியகுமார் யாதவ் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன். எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அவரால் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே என்னை பொருத்தவரை அவரை இந்திய அணியில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறினார்.
மேலும் பேசுகையில் “காயத்திலிருந்து இந்திய அணிக்கு மீண்டு வந்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடுவார்களா? என்பது தெரியாது. ஆனால் ரோகித் சர்மா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடரில் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.