ரன் எடுக்கவில்லை, எடையை குறைக்கவில்லை என அவரை மட்டுமே சொல்வது நியாயமற்றது – ரோஹித்திற்கு ஆதரவாக களமிறங்கிய ஹர்பஜன் சிங்
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்தும் அவருடைய கேப்டன்சி குறித்தும் பலவிதமான விமர்சங்கள் சமீப காலமாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் வெற்றி பெறாத நிலையில் கோலி அணியின
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்தும் அவருடைய கேப்டன்சி குறித்தும் பலவிதமான விமர்சங்கள் சமீப காலமாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் வெற்றி பெறாத நிலையில் கோலி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்போது சிறப்பான ஃபார்மில் இருந்த ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் ரோஹித் ஷர்மாவினாலும் கடந்த டி20 உலக கோப்பையில் வெற்றிபெற முடியவில்லை. மேலும் சமீபத்தில் நடந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியிலும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பெரும் தோல்வியை தழுவியது அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது. குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முடிவுகள் தான் இந்தியாவின் இந்த தோல்விக்கு காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் அவரது ஃபார்ம் மீதும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மட்மல்லாமல் இந்திய நாட்டில் உள்ள முன்னாள் வீரர்களே கேள்வி எழுப்பினார்கள். ஏனென்றால் ஐபிஎல் போட்டியிலும் சரி சமீபத்தில் ஆடிய டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியிலும் சரி ரோஹித் ஷர்மா சில தவறான ஷாட்டுகளை விளையாடி ஆட்டமிழந்தார். இதனால் சேவாக், கவாஸ்கர், சஞ்சய் மஞ்சுரேகர் என பலர் விமர்சனம் செய்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்த விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஹர்பஜன் சிங் கூறியது :
அவர் கூறுகையில் “ரோஹித்தை விமர்சித்த விதத்தில் மக்கள் சற்று அதிகமாகப் போவதை நான் காண்கிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, ஒரு தனி நபர் விளையாட்டின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. WTC இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படவில்லை அது உண்மை தான். ஆனால் நீங்கள் அதனை அப்போதே பேசிவிட்டு முடித்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் ரன்களை எடுக்கவில்லை, எடையை அதிகரிக்கவில்லை, சிறப்பாக கேப்டனாக இல்லை என்று ரோஹித்தை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது. என்னை பொருத்தவரையில் ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன். நான் ரோஹித் ஷர்மாவுடன் இணைத்து விளையாடியிருக்கிறேன். அவரை உன்னிப்பாக கவனித்ததில் மும்பை இந்தியன்ஸ் டிரஸ்ஸிங் ரூமில் மட்டுமல்ல, இந்திய டிரஸ்ஸிங் ரூமிலும் அவருக்கு அதிக மரியாதை உண்டு. எனவே சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவது நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன்.
அவர் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டுவதை விட நீங்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். பிசிசிஐயின் ஆதரவு இருந்தால், நீங்கள் சுதந்திரமாக விளையாட முடியும். எம்எஸ் தோனி அல்லது விராட் கோலி மட்டும் அல்ல. நீங்கள் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் அந்தக் கால பிசிசிஐ தலைவர்களிடமிருந்து நிறைய இந்திய அணியின் கேப்டன்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது என்றார் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்.