CSK வில் உள்ள நிலைமையும் RCB நிலைமையும் வேறுபட்டது.. உதாரணம் சிவம் துபே – ஆர்சிபியை கடுமையாக சாடிய ஹர்பஜன் சிங்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு கடந்த 9 ஆண்டுகளாக கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் மோதிய போது எல்லாப் போட்டுகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் பாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.அது கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக அமைந்தாலும் போட்டி போக போக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் விராட் கோலிக்கு ரன்களை வாரி வழங்கி வந்தனர். பெங்களூர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை அடித்தது. அதில் அதிகபட்சமாக கிங் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்சர்களையும் அவர் அடித்து இருந்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சொலிக்கவில்லை.
இந்த ரன்களே வெற்றிபெறுவதற்கு போதுமானதாக இருந்தாலும் கூட ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சொதப்பிய காரணத்தினால் கொல்கத்தா அணியின் வீரர்கள் சுலபமாகவே இந்த இலக்கை எட்ட 16.5 ஓவர்களிலேயே இந்த இலக்கை எட்டினர். இதனால் கடந்த 10 வருடங்களில் பெங்களூரு அணியை சின்ன சாமி மைதனத்தில் வீழ்த்தியுள்ளனர். மேலும் இந்த தோல்விக்கு பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் சொதப்பியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது
இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் பௌலர்கள் எங்கே? ஐபிஎல் 2024ல் அவர்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லை. என்னைப் பொறுத்தவரை பந்துவீச்சு என்பது கவலைக்குரிய பகுதியாக் ஆர்சிபியில் இருந்து வருகிறது. யுஸ்வேந்திர சாஹலை என்ன செய்தார்கள்? அவர் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார், ஆனால் அவர் தக்கவைக்கப்படவில்லை. அவர் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவர்.
அவர்களிடமும் வனிந்து ஹசரங்கா இருந்தார், ஆனால் அவரும் விடுவிக்கப்பட்டார். பெரிய வீரர்களை விடுவித்து போட்டிகளில் வெற்றி பெற முடியாது. முகமது சிராஜைத் தவிர அணிக்காக போட்டிகளை வெல்லக்கூடிய எந்த பந்துவீச்சாளர்களையும் நான் காணவில்லை. சிராஜ் கூட பார்முக்காக போராடி வருகிறார். KKRக்கு எதிரான போட்டியில் கர்ண் ஷர்மாவுக்கு ஓய்வு அளித்தனர்.
ஆர்சிபி வீரர்களை ஆதரிக்க மாட்டார்கள். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெற்றி பெற்று வரும் சிவம் துபேவின் சிறந்த ஆட்டத்தை ஆர்சிபியால் பெற முடியவில்லை. அவர் 2023 இல் கோப்பையை வென்ற சீசனில் CSK இன் நட்சத்திர வீரராக இருந்தார். சிவம் RCBக்காக விளையாடியபோது அவர் செயல்படத் தவறிவிட்டார். உண்மையில் வீரர்கள் CSK இல் ஆதரவைப் பெறுகிறார்கள் ஆனால் RCB இல் நிலைமை வேறுபட்டது என்றார் ஹர்பஜன் சிங்.