இதை செய்தால் தோனியை அணியில் எடுக்காதிங்க.. அவருக்கு பதிலா இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க – ஹர்பஜன் சிங் விமர்சனம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த 53 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் மோதியது. இன்ற

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த 53 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் மோதியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தடுமாறி விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இது சுலபமான போட்டியாக இருக்கும் என்று பஞ்சாப் நினைத்தது. சென்னை அணியின் வீரர்கள் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஜடேஜா சிறப்பாக பேட்டிங் மற்றும் பௌலிங் செய்து இருந்தார். 168 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பலாக அமைய 20 ஓவர்கள் முடிவில் அவர்களால் 139 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அவர் கூறுகையில் : எம்எஸ் தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் அவர் சென்னை அணிக்காக விளையாடக்கூடாது. அவரை விட வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை ஆடும் லெவன் அணியில் சேர்ப்பது நல்லது. அவர் முடிவெடுக்க கூடிய இடத்தி இருந்து தனது அணியை வீழ்த்தி விட்டு பேட்டிங் செய்ய வராமல் இருந்தார்.

ஷர்துல் தாக்கூர் தோனிக்கு முன்னால் பேட்டிங் செய்ய வந்தார். தோனியை போல் தாக்கூரால் ஷாட்களை அடிக்க முடியாது, தோனி ஏன் இந்த தவறை செய்தார் என்று புரியவில்லை. அவரது அனுமதியின்றி எதுவும் நடக்காது, அவர் முன்னதாக விளையாட வேண்டாம் என்று இந்த முடிவு வேறு யாரோ எடுத்தது என்பதை ஏற்க நான் தயாராக இல்லை.

அந்த நேரத்தில் சென்னை அணிக்கு விரைவான ரன்கள் தேவைப்பட்டது, தோனி முந்தைய ஆட்டங்களில் அதைச் செய்துள்ளார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் பின்வாங்கியது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று CSK வெற்றி பெற்றாலும், நான் தோனியை நான் விமர்சிப்பேன். மக்கள் எதையும் சொல்லட்டும். எது சரி என்பதை நான் கூறுவேன் என்றார் ஹர்பஜன் சிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை