இங்கிலாந்தை விட இவங்களே நல்ல பௌலிங் போடுவாங்க. இங்கிலாந்து அணியை விமர்சித்த ஹர்பஜன் சிங்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு மிகவும் சுமாராக தான் இருந்தது ஹர்பஜன்சிங் காட்டம். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திரு
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு மிகவும் சுமாராக தான் இருந்தது ஹர்பஜன்சிங் காட்டம். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். நேற்றைய 2 வது போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்கா அணியும் மும்ன்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இரண்டு அணிகளும் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங் செய்ய விரும்பியது. ஆனால் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 400 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் கிளாசென் 109 ரன்களும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களும், ஜான்சன் 75 ரன்களையும் குவித்தனர்.இங்கிலாந்து அணியின் பௌலிங்கை தென்னாபிரிக்கா அணி நான்கு பக்கமும் சிதற அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர் டாப்லி 3 விக்கெட்டுகளையும் கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை எடுக்காமல் சொதப்பினர்.
400 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். 1௦௦ ரன்கள் இருந்த நிலையிலே 8 விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து அணி 22 ஓவர் முடிவில் 1௦ விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் விதியசாரத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வூட் 45 ரன்களும், கஸ் அட்கின்சன் 35 ரன்களும் ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி தலா இரண்டு விக்கெட்டுகளையும் ராபாடா மற்றும் மகாராஜ் தலா 1 விக்கெட்டையும் எடுத்து இங்கிலாந்து அணியை சுருட்டினர்.
ஹர்பஜன் கூறியது:
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் ஷார்ட் பால் மற்றும் யாக்கர்களை வீசவில்லை. பேட்ஸ்மேன் எளிதாக அடிக்கப்படும் வகையிலே அவர்கள் பந்து வீசி வந்தனர். முதல் தர கிரிக்கெட்டில் கூட நாம் இதைவிட திறமையான பங்கு வீச்சாளர்களை பார்த்து இருக்கின்றோம். இந்த மைதானம் சிறந்த மைதானம் உங்கள் லென்த் கொஞ்சம் தவறவிட்டாலும் பந்தானது மைதானத்திற்கு வெளியே சென்று விடும். மேலும் இங்கிலாந்து அணி யாக்கர் மற்றும் மெதுவான பந்துகளை வீசவில்லை. அவர்களுடைய பந்து வீச்சில் மிகவும் சிக்கல்கள் உள்ளது நான் உணர்கிறேன்.
தென் ஆப்பிரிக்கா அணியை எவ்வளவு பாராட்டினாலும் அது சரியே. கடைசி 15 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எங்கு பந்து வீச வேண்டும் என்று தெரியாத அளவிற்கு தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் ஒரு பண்பு தவறாக வீசினாலும் அதனை வெளியில் அடித்து தள்ளினர். தென்னாப்பிரிக்கா அவர்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதற்கு வார்த்தைகளை இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார்.