அப்போ நீங்க மேட்ச்ச பார்க்கலையா? இதை தான் பார்த்தீங்களா? இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனை விமர்சித்த ஹர்பஜன் சிங்.

உலக கோப்பை 2021ல் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மைதானத்தில் உள்ள இருக்கைகள் காலியாக இருப்பதை இங்கிலாந்து அணியும் ஜாம்பவான் ஒருவர் கருத்து கூறிய நிலையில் அதற்கு இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெ

By ·

உலக கோப்பை 2021ல் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மைதானத்தில் உள்ள இருக்கைகள் காலியாக இருப்பதை இங்கிலாந்து அணியும் ஜாம்பவான் ஒருவர் கருத்து கூறிய நிலையில் அதற்கு இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. நேற்று இந்திய அணி ஆப்கானிஸ்தான அணியை எதிர்கண்டது அதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யது பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேற்றைய போட்டி:

அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களில் பும்ராவிடம் அவுட் ஆகி வெளியேற அதன் பின் குர்பாஸ் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் நிதானமாக விளையாட நினைத்த ரஹ்மத் 16 ரன்களிலே தாக்கூர் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேற அதன் பின் அஸ்மத்துல்லாஹ் நிதானமாக வெளியே அடி 66 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து விளையாடி ஷாஹிதி 80 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர் முடிவில் 272 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 273 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் கிஷன் ஆரம்பம் முதல் அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீசை நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர். ரோகித் சர்மா 63 பந்துகளில் தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். மேலும் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பின்றி 150 ரன்களை குவித்தனர்.

மற்றொரு பக்கம் விளையாடி கொண்டு இருந்த இஷாந்த் கிஷன் 46 பந்துகளில் 47 ரன்களை அடித்த நிலையில் ரஷித் கான் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணைத்து பந்து வீச்சை சிதறடித்து வந்தனர். அதன் பின் அவர் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் விராட் கோலி 55 ரன்களும் ஸ்ரேஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது அப்போது அங்குசில இருக்கைகள் காலியாக இருந்தன. நேற்று ஆப்கானிஸ்தான் அணியை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணி எதிர்கொண்டது. அப்போதும் சில இருக்கையில் காலியாக இருந்ததை நாம் கண்டு இருப்போம் இருப்பினும் இந்திய அணி விளையாட அங்குள்ள இருக்கைகள் நிரம்பிக் கொண்டே வந்தது.

இங்கிலாந்து ஜாம்பவானுக்கு பதிலடி வெளியிட்ட ஹர்பஜன்சிங்.

இது குறித்து முன்னாள் இங்கிலாந்தின் கேப்டன் மைக்கேல் வாகன் x தளத்தில் இதனை கிண்டல் செய்யும் வகையில் இந்தியாவில் நடைபெறும் போட்டியின் போது இருக்கைகள் காலியாக இருப்பது போன்று அவர் பதிவு ஒன்றை போட்டிருந்தார் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஹர்பஜன் சிங் “நீங்கள் விளையாட்டை பார்க்கிறீர்களா அல்லது அங்குள்ள காலியாக இருக்கைகளை பார்க்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அணி அடுத்ததாக அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணியை சனிக்கிழமை அன்று எதிர்கொள்ளவுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை