இவங்க ரெண்டு பேரை விட சிறந்த வீரரை தற்போது இந்திய அணியில் யாரும் இல்லை – இந்திய அணியை விமர்சித்த ஹர்பஜன் சிங்.
IND vs RSA முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாற வைத்தனர். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகள
IND vs RSA முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாற வைத்தனர். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களையும் அடித்து இருந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 3 விக்கெட்டுகளையும் கோட்ஸி மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி இந்திய அணிக்கு 164 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். அதாவது 2வது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களை அடித்து இருந்தது.
அதில் அதிக பட்சமாக எல்கர் 185 ரன்களும் ஜான்சன் 84 ரன்களும் பெண்டிகம் 56 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அதன் பின் இன்றைய நாளில் 3வது இன்னிங்க்ஸ் விளையாடிய இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன் மூலம் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக கோலி 76 கில் 26 ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பர்கர் 4 விக்கெட்டுகளையும் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் ராபடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதற்க்கு முன்பு இந்திய அணியில் புஜரா சிறப்பாக விளையாடி இருந்தார் இருப்பினும் கடைசி சில வருடங்களாக சரியாக விளையாடவில்லை. இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில்,
இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாரா எதற்காக அணியில் எடுக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை அவர்களே கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாடுகளில் விளையாடிய போட்டிகள் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தனர். தேர்வுக்குழு அவர்கள் எந்த காரணத்திற்காக வெளியேற்றியது? புஜாராவை விட சிறந்த கிரிக்கெட் டெஸ்ட் வீரர் அணியில் இன்னும் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. அவர் நிதானமாக விளையாடி இந்திய அணிக்கு ரண்களை சேர்த்து வருவார்.
போட்டி முடிந்த மூன்று நாட்களில் இந்திய அணி எந்த இடத்திலும் சிறப்பாக விளையாடவில்லை முதல் இன்னிங்சில் 255 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர். ஆனால் இந்திய அணிகள் இரண்டாவது இன்னிங்ஸில் 131 மட்டுமே அடிக்க முடிந்தது இதில் இந்திய அணியின் தோல்வி முதலில் முடிவாகிவிட்டோம் என்று ஆகிவிட்டது என்றும் அவர் கூறியிருந்தார்