யுவராஜ் சிங்கிற்கு பிறகு நம்பர் 4 இடத்திற்கு சரியான ஆள் கிடைத்து விட்டார் – ஹர்பஜன் சிங் கருத்து

இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்

By ·

இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த இந்தியா முதலிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் வந்த கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரது மிகச் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 41.2 ஓவர்களிலேயே வெற்றி பெற வைத்தனர் மேலும் 97ரன்கள் எடுத்து அவுட் ஆகாமலும் இருந்தார்.

இந்நிலையில் கேஎல் ராகுலின் இந்த பொறுப்பான ஆட்டத்திற்கும் பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேஎல் ராகுல் குறித்து பேசியுள்ளார்எ அவர் கூறுகையில் “கே.எல்.ராகுல் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யுவராஜ் சிங்கிற்குப் பிறகு, 4-5-வது இடத்தில் இருக்கும் ஒரு பேட்டரைக் கண்டுபிடித்துள்ளோம். ஒரு ரன் மற்றும் இரண்டு ரன்களை எப்படி எடுக்க வேண்டும், எப்போது எல்லைகளை அடிக்க வேண்டும், எப்போது ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

அவர் காயத்தில் இருந்து திரும்ப வந்ததிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் அவர் நன்றாக இருக்கிறார். கடந்த ஆண்டு காயம் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் மீண்டும் வந்த விதம் ஒரு ஆசீர்வாதம். அவர் நன்றாக பேட்டிங் செய்வதால் அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்று நம்புகிறேன். அவரது தடுப்பு மற்றும் ஷாட்டுகளை விளையாடுவது மிகவும் எளிதாக தெரிகிறது. அவரது பேட்டிங்கை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ஹர்பஜன் சிங்.

மேலும் பேசிய அவர் நடத்தி மாற்றிய விக்கெட்டான ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித்தை ஆட்டமிழக்க வாய்த்த ஜடேஜா குறித்தும் அவர் பேசியிருந்தார். அவர் கூறுகையில் ” ஜடேஜா சரியான வேகத்தில் பந்துவீசினார் மற்றும் அவரது சீம் நிலையும் மிகவும் நன்றாக இருந்தது. ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த அவர் வீசிய பந்து போட்டியின் முக்கியமான பந்து வீச்சு ஆகும். மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாக வீசினர்.

இந்தியாவின் மெதுவான பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆஸ்திரேலியாவுக்கு எந்த திட்டமும் இல்லை. ஜடேஜா இங்கே மந்திரவாதியாக இருக்கிறார். சென்னையில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார். சென்னையில் அவரது சாதனையைப் பார்த்தால், அவர் எப்போதும் 3-4 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார் என்று கூறியிருந்தார் ஹர்பஜன் சிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை