அவர் சிறப்பாக விளையாடினார் இருந்தாலும்..இளம் வீரர் மீது ஏமாற்றமடைந்த ஹர்பஜன் சிங்.

சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொம

By ·

சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டில் சிறப்பான இன்னிங்கை விளையாடினார்.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடினர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் தொடக்க போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டது, சதம் அடித்தது என பல சாதனைகளையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் இவர் அடித்த அந்த ரன்களை கூட வெஸ்ட் இண்டீஸ் அணியானது தன்னுடைய இரண்டாவது இன்னிங்கில் எடுக்கவில்லை.

மேலும் இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருதானது வழங்கப்பட்டது. அதோடு அடுத்து வரும் சர்வதேச போட்டிகளில் இவரின் பெயரும் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விடாது.

ஜெய்ஸ்வால் பற்றி ஹர்பஜன் சிங் :

இந்நிலையில் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய ஹர்பஜன் சிங் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினாலும் அவர் மீது கொஞ்சம் ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்கத்திலேயே சரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனாலும் அவர் தன்னுடைய இரட்டை சதத்தை தன்னுடைய அறிமுக போட்டியிலேயே தவறவிட்டது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. அவர் வெகு காலம் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எனக்கு தோன்றுகிறது.

அவரின் திறமையில் எந்த சதேகமும் கிடையாது, கடுமையாக உழைத்து தன்னுடைய முழு திறமையையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதுதான் உலகை ஆழ மிகவும் தேவையான ஓன்று என்றார் ஹர்பஜன் சிங். மேலும் பேசிய அவர் ரோஹித் ஷர்மா குறித்தும் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார் ” ரோஹித் ஷர்மா சமீப காலமாக அதிகமாக ரன்களை அடிக்கவில்லை. ஆனால் தற்போது அவர் மீண்டும் திரும்பியிருப்பதற்கு வாழ்த்துகள்.

விராட் கோலி சிறப்பாக விளையாடி 76 ரன்களை எடுத்தார். ஆனால் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்தியா தற்போது வென்றிருப்பது அடுத்து போட்டியிலும் வென்று 2-0 வரும் என்று எதிர்பாக்கலாம். மேலும் இது இந்திய அணியின் வீரர்களுக்கு ரன்களை குவிக்க ஒரு நல்ல வாய்ப்பு, அதோடு இது அடுத்து வரும் பெரிய போட்டிகளுக்காக அவர்களின் பார்மை தக்க வைத்து கொள்ள உதவும் என்றார் ஹர்பஜன் சிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை