எதிர்கால இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துவார். ஏனென்றால்…கில்லிற்கு ஆதரவாக பேசிய ஹர்பஜன் சிங்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணியானது மிகவும் திறமையுமாக விளையாடிது. இதற்கு முன்னதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு சுருட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித்

By ·

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணியானது மிகவும் திறமையுமாக விளையாடிது. இதற்கு முன்னதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு சுருட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடித்தனர்.

ஆனால் எப்போதும் போல இல்லாமல் இந்த முறை ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கு முன்னர் உலக கோப்பை போட்டியில் சரியாக விளையாடாத அழுத்ததுடன் இந்த அழுத்தமும் தற்போது அவருக்கு சேர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சுப்மன் கில்லை பற்றியும் அவரது அவரது தந்தை பற்றியும் பேசியுள்ளார்.

ஹர்பஜன் சிங் கூறியது :

அவர் கூறியதாவது “சுப்மன் கில் மிகவும் கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள வீரர். அவருக்கு கிரிக்கெட் மீது மிக அதிகமான ஒரு பசி இருக்கிறது. அவர் தன்னால் மற்றவர்களை விட ஏதவது பெரிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. இந்த ஒரு விஷயம் சுப்மன் கில்லை மற்ற வீரகளிடம் இருந்து தனித்தது காட்டுகிறது.

சுப்மன் கில் தந்தை உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்க வேண்டும் என்றால் அவர் இந்திய அணிக்காக 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் கிரிக்கெட் ஆடியே ஆகவேண்டும். அவருடன் மன நிலையில் திறமையும் வென்றே ஆகவேண்டும் என்ற உறுதியும் அவரிடம் இருக்கிறது. எனக்கு அவரை பற்றி கொஞ்சமாகத்தான் தெரியும். அவர் மிகவும் திறமைசாலியான வீரர். அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.

சுப்மன் கில் தந்தை குறித்து :

இதனிடையே சுப்மன் கில் பஞ்சபில் உள்ள சிறிய நகரமான பாசில்காவில் பிறந்தார். சுப்மன் கில் தந்தை கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருந்து வந்தார். தன்னுடைய மகன் சிறப்பான கிரிக்கெட் வசதிகளை பெற வேண்டும் என்று அவர் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைத்தனத்தின் அருகே குடிபெயர்ந்தார். இதனால் கில்லிற்கு நல்ல பயிற்சியும் கிடைத்து தற்போது இந்திய அணியில் இடமும் பிடித்து விட்டார்.

மேலும் இந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங் கூறுகையில் “சுப்மன் கில் தொடர்ந்து பல வருடங்களுக்கு இந்திய அணியில் விளையாடுவார் என்றும் ஒருநாள் இந்திய அணிக்கு கேப்டனாக வருவார் என்றும் தான் நினைப்பதாகவும் கூறினார். ஏனென்றால் அப்போதுதான் அவனுடைய தந்தை திருப்த்தி அடைவார். மேலும் அது நமக்கும் பெருமை ஏனென்றால் அவர் எங்கள் வீட்டு பிள்ளை என்று கூறினார் ஹர்பஜன் சிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை