இந்த விஷயத்தை ஜீரணிக்க முடியவில்லை – ஹர்திக் பாண்டியா வருத்தமான ட்விட் பதிவு.

காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி உள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் தற்போது 23 ஆட்டங்கள் முடிவடைந்து நிலையில் இந்தி

By ·

காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி உள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் தற்போது 23 ஆட்டங்கள் முடிவடைந்து நிலையில் இந்திய அணி நடந்த 7 போட்டிகளிலும் வெற்றிகளை பெற்று முதலிடத்திலிருந்து வருகிறது.

இந்திய அணிக்கு இறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. மேலும் பெரிய பெரிய அணிகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் சிறிய அணிகள் தோற்கடித்து வருவதை நாம் கண்டு இருப்போம். அதேபோல் இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது உள்ளது. ஹர்திக் பாண்டியா அரை இறுதி போட்டியில் விளையாடுவார் என செய்திகள் வெளியான நிலையில் அவர் உலக கோப்பையில் இருந்து விலகி உள்ளது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அது அவருடைய குதி காலில் ஏற்பட்டதால் அந்த போட்டியில் இருந்து அவர் வெளியேறி விட்டார். அதன் பின்பு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்ட அவருக்கு ஓய்வு தேவை என்று அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர் முந்தைய போட்டியில் இந்திய அணியின் பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்திய அணியின் அரையிறுதியில் சென்றதால் ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் பலர் கூறி வந்தனர். இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு பேட்டிங்கில் களமிறங்க வாய்ப்பு அவ்வளவு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் அணிக்கு ஒரு பவுலிங் ஆல்ரவுனராக தற்போது இருந்து வருகிறார் 4 போட்டிகளில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பலமாக இருந்து வருகிறார்.

அதற்கு பின்பு தென்னாப்பிரிக்க அணியை விளையாட உள்ளது.இந்த போட்டிகளில் விளையட மாட்டார் என்று கூறி வந்த நிலையில் அவர் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு காயம் இன்னும் சரியாக வில்லை என்றும் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் அதிகார்பபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தான் கார்த்திக் பாண்டியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில் “உலகக் கோப்பையின் எஞ்சிய பகுதியை நான் இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அவர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன் நான் அணியுடன் இருப்பேன். அனைவரின் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி. இந்த அணி சிறப்பானது, அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இப்படிக்கு உங்கள் ஹர்திக் பாண்டியா என்று பதிவிட்டுள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை