“ஹர்திக் பாண்டியா விஷயத்தில் நெருப்பு இல்லாமல் புகையாது” – ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து.
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத்
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.
அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது. குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை.
2023 ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணியின் உரிமையாளருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அதனை அடுத்து அவர் அணியை விட்டு விலக முடிவை அப்போதே எடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை அப்போது அணியில் இருந்து மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டது என்று அம்பானி தரப்பில் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. ஏலம் இல்லாமல் இது போன்ற அணியில் இருக்கும் வீரரை மற்றொரு அணிக்கு மாற்றம் செய்யும்போது அதற்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி குஜராத் அணிக்கு அளிக்க வேண்டும்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில், இது இன்னும் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தங்கள் அணிக்காக இரண்டு முறை கேப்டனாக இருந்து ஒரு முறை கோப்பையையும் இரண்டாவது முறை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணி எப்படி வெளியிடும். மும்பை அணிக்கு சென்றால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பாரா? என்பது எல்லாம் கேள்வியாகவே இருக்கின்றது.
அதேபோல் மற்றொரு பக்கம் பார்த்தும் என்றால் ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணிக்கு விட்டு விடாது மேலும் தற்போது பரவிக் கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் நெருப்பு இல்லாமல் புகையாது என்பதற்கு போல் தான் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்து வேகம் பந்துவீச்சாளர் ஆர்ச்சரை தங்கள் அணியிலிருந்து குஜராத் அணிக்கு அனுப்பி விடும் என்று நான் நினைக்கின்றேன் இதன் மூலம் அவர்களுக்கு 8 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கும் இதை வைத்து அவர்கள் வேறு யாரையாவது ஏலத்தில் எடுக்கலாம் என்றும் கூறியிருந்தார்