தோனியின் சிறப்பே அதுதான் – CSKவிடம் தோல்வியடைந்தாலும் தோனியை புகழ்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா.

நேற்று சென்னை vs குஜராத் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ருதுராஜ் அதிரடியாக விளையாட நினைத்து 60 ரன்களில் ஆட்டமிழந

By ·

நேற்று சென்னை vs குஜராத் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ருதுராஜ் அதிரடியாக விளையாட நினைத்து 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 20 வது ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

173 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சாஹா நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் 12 ரன்களில் சாஹா அவுட்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். பின்னர் ஷனகா 17 ரன்களிலும், மில்லர் 7 ரன்களிலும், கில் 42 ரன்களில் வெளியேற போட்டி சென்னை அணியின் கைக்கு மாறி சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஹர்திக் பண்டியா கூறியது :

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டிய பேசுகையில் “நாங்கள் மிகவும் சரியாக பந்து வீசினோம் ஆனால் சில தவறுகளை செய்தோம் அது தோல்விக்கு காரணமாக மாறியது. 15 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம் என்று நினைத்தேன். சிறப்பான பல விஷியங்களை செய்தலும், அடிப்பதற்கு சுலபமான சில பந்துகளையும் வீசினோம். எங்களுடைய திட்டத்தை செயல்படும் போது சில ரன்கள் கொடுத்து விட்டோம். ஆனால் அதனை பற்றி அதிகமாக யோசிக்க தேவையில்லை என்று நினைக்கிறன்.

எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. அதில் வெற்றிபெற்று பைனல் செல்வோம் என்று நம்புகிறேன் என்றார் ஹர்திக். மேலும் பேசி அவர் தோனி குறித்து கூறுகையில் “தோனியுடைய சிறப்பம்சமே பந்துவீச்சாளர்களை அவர் கையாளும் விதம் தான். அவரை எதிர்த்து விளையாடும் போது தேவைப்படும் ரன்களை விட 10 ரன்கள் அதிகம் தேவைப்படும் என்பதை போல தோன்றும்.

நாங்கள் விக்கெட்டுகளை தொடர்ந்து இழக்கும் போது அவர் சரியான பந்துவீச்சாளர்களை கொண்டு தாக்கினார். அவரை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாவது இன்னிங்கில் ஈரப்பதம் இருக்கும் என்று நினைத்தோம் ஆனால் துரதிஷ்டவசமாக அது இல்லை. ஒருவேளை எங்களுடைய அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால் சென்னை அணியை மீண்டும் சந்திப்போம் என்றார் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில் இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றனர். இதில் வெற்றிபெறும் அணி வரும் 26ஆம் தேதி குஜராத் அணியை குவாலிபையர் 2இல் எதிர்கொள்ளும். ஒருவேளை குஜராத் அங்கே பெற்றிபெறும் பட்ச்சத்தில் குஜராத் சென்னை அணியை இறுதிப்போட்டியில் எதிகொள்ளும் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை