மும்பை அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா செஞ்ச பெரிய தப்பு தான் காரணம். அவர் இத செஞ்சி இருக்க கூடாது – இர்பான் பதான் பேச்சு

உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 5 வது போட்டியில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. இரவு 7:30 மணிக்கு தொடங்கிய குஜராத் டைடன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியு

By ·

உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 5 வது போட்டியில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. இரவு 7:30 மணிக்கு தொடங்கிய குஜராத் டைடன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு சற்றும் கை கொடுக்கவில்லை.

மும்பை அணியின் கேப்டன்சி மாற்றம் காரணமாக அணிக்குள் பனிப் போர் நிலவி வருகிறது. அந்த வகையில் நேற்று மைதானத்தில் செய்த விஷயங்களும் நடைபெற்றது. மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டு வந்தனர் அதை நாம் பார்த்து இருப்போம். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் ஆட்டக்காரர்கள் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கத்தை அளித்திருந்தாலும் அதன் பின் வந்து வேகத்தில் அவ்வப்போது சீரான இடங்களில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

அதில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார். எனவே குஜராத் டைடன்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது. அதன்பின் 169 இலக்காக கொண்டு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேற முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றொரு பக்கம் நின்று நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.

மும்பை அணையின் அதிகபட்சமாக ப்ராவிஸ் 46 ரன்கள் அடித்து இருந்தார். எனது மும்பை இந்தியன்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ரண்களை மட்டுமே எடுத்த எடுத்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. அதில் முக்கியமானது பும்ரா போன்ற வீரருக்கு முதல் ஓவரை வழங்காமல் தாமே வந்து ஓவர் வீசியது.

அது மட்டுமல்லாமல் பேட்டிங் ஆர்டரில் தனது கேப்டன்சியை நிருபிக்கிறேன் என்ற முறையில் பல தவறான முடிவுகளை எடுத்தார். அதில் ரஷித் கான் பந்து வீசும் போது ஹர்திக்பான்டியா பேட்டிங் செய்ய செல்லாமல் டீம் டேவிட்டை அனுப்பி இருந்தார். இது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில் , நேற்று mi அணியின் தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி தான். அனுபவம் உள்ள இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா ரஷீத் கானை எதிர்கொள்ளாமல் டிம் டேவிட்டை களமிறங்க வைத்தது தவறான முடிவு என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை