குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டிய பற்றி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் போட்டுள்ள இதயத்தை தொடும் இன்ஸ்டா பதிவு.

இந்தியாவில் தற்போது உலகத்திலே மிகப்பெரிய ஐபிஎல் போட்டியானது நடந்து வருகிறது. அதே சமயம் இந்தியாவில் கடந்த மார்ச் 21 தொடங்கி ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாகவே பண்டிகையின் போது முஸ்லீம் சகோதரர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பார்கள். அப்படி நோம்பு கட்டிபிடுக்கும

By ·

இந்தியாவில் தற்போது உலகத்திலே மிகப்பெரிய ஐபிஎல் போட்டியானது நடந்து வருகிறது. அதே சமயம் இந்தியாவில் கடந்த மார்ச் 21 தொடங்கி ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாகவே பண்டிகையின் போது முஸ்லீம் சகோதரர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பார்கள். அப்படி நோம்பு கட்டிபிடுக்கும் போது தன்னீர் கூட குடிக்க மாட்டார்கள். அப்படியொரு சூழ்நிலையில் ஐபிஎல் போட்டியில் பல அணிகளில் முஸ்லீம் வீரர்கள் இருக்கின்றனர்.

ரமலான் பண்டிகை :

அப்படி இந்த வருட ஐபிஎல்லின் வலிமையான குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள பல வீரர்கள் ரமலான் நேரத்தில் நோம்பு கடைபிடிக்கின்றனர். அன்ஹா வகையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கானை சொல்லலாம். இவர் முஸ்லிமகள் அதிகம் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்தவர். அதோடு இவர் ஒரு முஸ்லீம் என்பதினால் ஐவரும் நோம்பு கடைபிடிக்கிறார். ஆனாலும் ஐபிஎல் நேரத்தில் சரியாக தன்னுடைய வேலையே செய்து கொடுக்கிறார்.

அப்படி நிலையில் தான் நேற்று ஹர்திக் பாண்டியா தனது சொந்த அணி வீரர் ரஷித் கானின் ஹோட்டல் அறைக்குச் சென்றார், அங்கு அவர் ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் செஹ்ரி சாப்பிட்டு கொண்டிருந்தார் ரஷித் கான். இதனை பார்த்த ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் சேர்ந்து செஹ்ரி சாப்பிட்டார். இதனை ரஷித் கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

பதிவிட்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் ஹர்திக் :

ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஒவ்வொருவரும் அதிகாலையில் செஹ்ரி சாப்பிட வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரிய மனதுடன் ஹர்திக் பாண்டியா ஆப்கன் வீரர்களுடன் செஹ்ரி சாப்பிட சென்றார். அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருந்த போதிலும் நோம்பு நேரத்தில் ரஷித் கான் பந்துகளையும் வீசிக்கொண்டு, பேட்டிங்கும் செய்வது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்து என்றே சொல்லலாம்.

View this post on Instagram

A post shared by Rashid Khan (@rashid.khan19)

ஏனென்றால் கடந்த செவ்வாயன்று டெல்லி கேப்பிடல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் ரஷித் கான் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை