போட்டியின் அழுத்தத்தை சாதகமாக மாற்றுவோம் – 2023 உலக கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டிக்கு முன்பாக பாண்டியா நம்பிக்கை.
இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்
இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.
மேலும் தற்போது உள்ள இந்திய அணியானது பலமான அணியாக பார்க்கபப்டுகிறது, ஆனால் சமிபத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லிற்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்த காரணத்தினால் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் சில போட்டிகள் களமிறங்குவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு அழுத்தம் ஏற்பட்ட நிலையில் தான் இந்தியா இந்த உலக கோப்பையை வெல்லும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளார் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா.
அவர் கூறுகையில் ” எங்களிடம் சில உலகத்தரம் வாய்ந்த பேட்டர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நாங்கள் ஒன்றிணைந்து, அச்சமின்றி விளையாட வேண்டும், அழுத்தத்தையும் எதிர்பார்ப்பையும் நமக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, நாங்கள் செய்ததைத் தொடர வேண்டும். இது நிறைய எதிர்பார்ப்புகளுடன் உற்சாகமாக இருக்கிறது. அதே நேரத்தில் எங்களுக்கு கிடைக்கும் இந்த அன்பும் ஆதரவும் எங்களிடம் இருந்து சிறந்ததை கொடுக்கும்.
சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறோம், நிச்சயமாக நாங்கள் நன்றாகச் கடந்த காலங்களில் விளையாடியுள்ளோம். அந்த தருணத்தை அப்படியே உலகக் கோப்பைகளாக மாற்ற வேண்டும், இந்த ஆண்டு எங்களால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் பாண்டியா கூறினார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “நான் எப்போதும் என் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய விரும்பினேன், ஆனால் என் கனவில் நான் இங்கு வருவேன் என்று நான் நினைத்ததில்லை. நான் அதைப் பெறுவதற்கு என் பெற்றோர் செய்த ஒரு ஆசீர்வாதம் மற்றும் நிறைய நல்ல செயல்கள் தான் காரணம். நான் விளையாட்டை விளையாடினேன் என்பதை உறுதிசெய்து கொள்ள அவர்களுக்கு பெருமையும் உண்டு, ஆனால் அதே சமயம், நான் நாட்டுக்காக விளையாடுவது ஒரு கனவு, நான் கனவாக வாழ்கிறேன் என்றார் ஹர்திக் பாண்டியா.
இந்நிலையில் நாளை மதியம் 2.00 மணிக்கு சேப்பாக்கம் மைத்தானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியானது நடைபெற இருக்கிறது. பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு அதிகமாக கை கொடுக்கக்கூடிய மைதானம் என்று பலரும் கூறுவார்கள். அதேபோன்று ஆஸ்திரேலிய அணி வீரர்களும் சுழற்பந்து வீச்சினை எதிர்த்து விளையாடுவதில் சற்று சிரமத்தை சந்தித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். எனவே 3 ஸ்பீன்னர்களும் களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.