கடந்த வருடம் போல இந்த வருடம் இருக்காது என்று நினைக்கிறேன் – ஆர்சிபியை வீழ்த்திய பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2023 க்கான 70வது மற்றும் ப்ளே ஆப்பிற்க்கான கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்

By ·

ஐபிஎல் 2023 க்கான 70வது மற்றும் ப்ளே ஆப்பிற்க்கான கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி மற்றும் டு பிளசிஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

டு பிளசிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க. மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் லோமரோர் 1 ரன்னில் அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் பெங்களூரு அணி ரன்களை குவிக்க திணறி வந்தனர். இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார் விராட் கோலி. 60 பந்துகளிலே தனது அடுத்தடுத்து சதத்தை பூர்த்தி செய்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தனர்.

இந்நிலையில் 198 ரன்கள் இலக்கை துரத்த வந்த குஜராத் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. சாஹா 12 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.இருந்த போதிலும் இதனையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் பொறுமையாக சுப்மன் கில்லிற்க்கு துணையாக ஆடினார். மேலும் 39 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் அதிரடியாக விஜய் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனாலும் கடைசி வரையில் பொறுமையாக ஆடிய சுப்மன் கில் குஜராத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மேலும் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 52 பந்துகளில் 104 ரன்களை எடுத்தார் சுப்மன் கில். இதன் போது 5 போர்கள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார். இதனால் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டிய வீரர்கள் குறித்தும் விராட் கோலி குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.

ஹர்டிக் பாண்டியா கூறியது :

பாண்டியா பேசுகையில் “அணியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்களுடைய வெற்றியை தொடர வேண்டும் என்றுநினைதோம். சுப்மன் கில் மிகவும் சிறப்பாக விளையாடினார். வித்தியாசமான சுப்மன் கில்லை இன்று நாம் பார்த்தோம். அவர் பௌலர்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. இதனால் மற்ற பேட்ஸ்மேன்களும் நம்பிக்கையாக விளையாடினார்கள். தொடக்கத்தில் நாங்கள் 197 ரன்கள் எடுத்திருப்போம், ஆனால் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை.

மேலும் விராட் கோலி குறித்து பேசுகையில் ” கோலி இன்று ஆடியது சிறப்பான இன்னிங்ஸ். அதுவும் டெத் ஓவர்களில் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். என்னால் இதனை விட சிறப்பாக அணியின் வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடந்த வருடம் எங்களுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் ரங்களுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அணியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களினாலேயே இந்த வெற்றி சாத்தியமாயிற்று என்றார் ஹர்திக் பாண்டியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை