இனிமேல் தான் அவர் ஆட்டம் இருக்கிறது, தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கரை பாராட்டிய ஹர்திக் பாண்டியா.

ஐபிஎல் 2023 தொடரின் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி அபாரமான வெற்றியை பெற்றது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலி

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி அபாரமான வெற்றியை பெற்றது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தார். இரண்டாவது ஓவரில் ஜெகதீசன் வெளியேறி மீண்டும் அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷர்தூல் தாக்கூர் பேட்டிங் செய்ய வந்தார்.

வந்த வேக்கதிலே அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு புறம் குர்பாஸ் அதிரடியாக விளையடினார். மற்றொரு புறம் வந்த வெங்கடேஷ் ஐயர் 11 ராணாவும் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்களை குவித்த நிலையில் நிதானமாக விளையாடி வந்த ரிங்கு சிங் 19 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த தனது அதிரடியான பாணியில் 19 பந்துகளில் 34 ரன்களை குவித்த நிலையில் அவுட்டாகினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 179 ரன்களை குவித்தனர்.   

180 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியில் யாரும் பெரிதாக விளையாடாத நிலையில்அதிரடியாக விளையாடிய கில் அரை சதத்தை பூர்த்தி செய்வர் என எதிர் பார்த்த நிலையில் 49 ரன்களில் சுனில் நரைன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் மற்றும் மில்லர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர்.

அரை சதம் விளாசிய விஜய் ஷங்கர் :

அதன் பின் அதிரடியை காட்டிய விஜய் ஷங்கர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். 17.5 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் சங்கர் இந்த போட்டியில் 24 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் கடந்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்து அணி வெற்றிபெற உறுதுணையாக இருந்திருக்கிறார். பீல்டிங்கிலும் விஜய் சங்கர் சிறப்பாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தான் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விஜய் ஷங்கரை பாராட்டியுள்ளார்.                    

விஜய் சங்கரை பாராட்டிய ஹர்திக் :

இந்த போட்டியில் நாங்கள் வெற்றி தோல்வியை பொருட்படுத்தவில்லை. விஜய் சங்கர் மிகவும் சிறப்பாக விளையாடினர் . அவரின் இந்த ட்டம் அவர் தன் மீது வைத்திருந்த தன்னம்பிக்கையும் அவர் அதற்காக செய்த கடின உழைப்பையும் காட்டுகிறது. இன்னும் வரும் காலங்களில் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறன். நீங்களும் அதனை கண்டிப்பாக பார்ப்பீர்கள். நான் எப்போதுமே நல்லவர்கள் நல்ல இடத்திற்கு செல்வார்கள் என்று நம்புகிறேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை