சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரை புகழ்ந்து தள்ளிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டிய.

உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியான ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடை

By ·

உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியான ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடை பெற்றது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்க்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் தவிர மற்ற யாரும் ஜொலிக்கவில்லை .ருதுராஜ் 50 பந்துகளில் 92 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் .அதன் பின் சென்னை ஆணியின் கேப்டன் தோனி ஒரு சில பவுண்டரிகள் அடித்தார்.அதன் பின் பேட்டிங்ஆடிய குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .சென்னை அணி தோல்வி அடைந்தது .

ஆனால் அந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்னுடைய தோல்களில் சுமந்து தனி ஒரு ஆளாக விளையாட்டரங்கத்தை ஆதிக்கம் செய்து ரன் சேர்த்தார். நிதானத்துடன் பொறுமையாக பேட் செய்த அவர் பின்னர் ஓவர்கள் குறைய குறைய நீண்ட ஷாட்களை அடிக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 23 பந்துகளில் அரை சதத்தையும் விளாசினார்.

அதற்குய பிறகு தொடர்ந்து ரன்களை குவிக்க தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 6களும் 4களுமாக விளாசினார். அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து அரை சதத்தை எட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களின் உதவியுடன் 92 ரன்கள் எடுத்து தன்னுடைய ஐபிஎல் சத்தத்தை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தார். இந்நிலையில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்ற்றுக்கு பாராட்டுக்கள் குவிந்த வன்னமாக இருக்கிறது.

அப்படியொரு நிலையில் தான் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ருதுராஜ் கெய்க்வாட் படி பேசியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில் ” “ருதுராஜ் கெய்க்வாட் நல்ல பந்துகளை எதிர்கொண்டாலும் அவற்றை சிறப்பாக விளையாடினார். ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் அருமையாக பேட்டிங் செய்தார். அவர் எப்போதும் இப்படியே இருப்பர் என்று நான் நம்புகிறேன். நேரம் வரும்போது கண்டிப்பாக அவர் இந்திய அணியில் இணைவார் என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை