அலட்சியம் தான் தோல்விக்கு காரணமா? – பௌலர்களை கண்டித்த ஹர்திக் பாண்டியா.

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் தனது ஐந்தாவது போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதல் ஓவரிலேயே சாஹாவின் விக்கெட்டை எடுத்தார். அதற்கு பிறகு வது ஓவரில் சாம்பா சுப்மன் கில் விக்கெ

By ·

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் தனது ஐந்தாவது போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதல் ஓவரிலேயே சாஹாவின் விக்கெட்டை எடுத்தார். அதற்கு பிறகு வது ஓவரில் சாம்பா சுப்மன் கில் விக்கெட்டை எடுத்தார். அந்த விக்கெட்டிற்கு பிறகு வந்த சப்மன் கில் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அரை சதம் வரையில் சென்றாலும் அரைசதம் இல்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

இந்நிலையில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தார்கள். இந்நிலையில் அடுத்த இன்னிங்கை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் நான்காவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் இரண்டாவது தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தானிடம் குஜராத் தோல்வியடைந்ததற்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா எதனால் தோல்வியடைந்தோம் என்று கூறியிருந்தார். அவர் கொடுத்திருந்த பேட்டியில் “டி20 கிரிக்கெட்டின் அழகே போட்டி கடைசி வந்துவரையில் இருக்கும். இதனை என்னுடைய அணி வாரங்களுக்கு அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். அனைவரும் இதனை மனதில் வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் டி20 போட்டிகளில் ஆட்டம் கடைசி பந்து வரையில் இருக்கும் எனவே கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும் சூழல் வீச்சாளர் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ஜாஸ் பட்லருக்கு பதிலாக சூழல் பந்துவீச்சாளர் நூரை இம்பாக்ட் பிளேயராக கொண்டு வந்ததற்கு காரணம். அவரை எதிர்கொள்ள எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் என்பதினால் தான். இந்த ஆட்டத்தில் நூர் ரன்களை கொடுத்திருந்தாலும் சில முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்த அவர் உதவியாக இருந்தார். இதனை தான் அவருடன் எங்களுடைய அணி எதிர்பார்த்தது.

ஆனால் அவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செய்யவில்லை. ஐபிஎல் என்பது நீண்ட தொடர். இன்னும் எங்களுக்கு நிறைய ஆட்டங்கள் மீதம் இருக்கிறது. அதில் நல்ல கிரிக்கெட்டை நாங்கள் விளையாடுவோம். எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பதனை இது எங்களுக்கு உணர்த்துகிறது. இந்த போட்டியில் முதல் பாதி முடிந்த பிறகு 10 ரன்கள் குறைவாக அடித்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சரியாக. ஆனால் இன்னமும் கொஞ்சம் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும் என்றார் ஹர்திக் பாண்டியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை