எப்பா முடியல.. ரோஹித் சர்மாவின் உதவியை நாடிய ஹர்திக் பாண்டியா – என்ன நடந்தது தெரியுமா?

கடந்த ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினது மோசமான செயல்திறனை காட்டிய நிலையில் அணியின் நிர்வாகம் பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிய விஷயம் என்னவென்றால் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன

By ·

கடந்த ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினது மோசமான செயல்திறனை காட்டிய நிலையில் அணியின் நிர்வாகம் பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிய விஷயம் என்னவென்றால் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது தான். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ப்பதியை ஏற்படுத்தியது. மேலும் ஹர்திக் இந்தியா மீண்டும் பலரும் விமர்சங்களையும் வைத்தனர். இந்நிலையில் தான் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது பெரும் பிரச்னையை உண்டாக்கியது.

ஏனென்றால் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியாமல் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதனால் ஹைதரபாத் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்னாக 277 ரன்களை எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. மேலும் இந்த போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் கூட விக்கெட்டுகளை எடுக்க திணறியது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் தான் இந்த போட்டிக்கு முன்னதாகவே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேட்டான் ரோஹித் ஷர்மா கவர் திசையில் நின்றிருந்த நிலையில் அவரை பவுண்டரி லைனிற்கு அருகே சென்று நிற்க சொன்னார் ஹர்திக் பாண்டியா. ஆனாலும் அந்த போட்டியில் குஜ்ரத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் தோல்வியை சந்தித்தது. இது அப்போது பெரும் பேசுபொருளாகவும் மாறியது.

குறிப்பாக ஹர்திக் பாண்டியா மீது நெட்டிசன்க்கள் பலரும் கடும் குற்றசாட்டுகளையும், அவமரியாதையாக நடிக்கிறார் என்று பலர் சாடினார். இந்நிலையில் தான் ஹைதராபாத்திற்கு எதிராக களமிறங்கிய மும்பை அணியால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஹைதராபாத்தின் பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சுழற்றி அடித்தனர். இதனிடையேதான் ரன் மலமலவென்று ஏரவே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் ஹர்திக்.

அந்த வேலையில் தான் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் பீல்டிங்கை செட் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். அதன் படி ரோஹித் ஷர்மாவும் பீல்டர்களை மாற்றி நிற்க வைத்தார். ஹர்திக் பாண்டியாவையும் பவுண்டரி லைனிற்கு சென்று நிற்குமாறு கூறினார். இந்த நிகழ்வு சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை