ஆடம்பரத்தை கேட்கவில்லை அடிப்படையான விஷயத்தை தான் கேட்கிறோம் – WI நிர்வாகத்தின் மீது அதிருத்தி தெரிவித்த ஹர்திக் பாண்டியா.
மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநா
மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவிய நிலையில் 3வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் ஏற்கனவே உலக கோப்பை போட்டியில் ஓங்கு பெறுவதற்கான குவாலிபயர் தொடரில் தோல்வியை தழுவிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து அந்த சோகமான நிலைமையில் இருந்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் கடுமயாக முயற்சி செய்தது. அதன் முதல் படியாகத்தான் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடியது.
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பெரும் தோல்வியை தழுவிய இந்தியா அந்த தொடரில் மிகவும் எளிமையாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டி நடந்தது. இதில் முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும் இரண்டாவது போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றிபெற்றது. ஆனால் மூன்றவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது சில சிக்கல்களை அனுபவித்தார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது முதல் ஒருநாள் போட்டியின் போது மைதானம் மற்றும் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு 1 மணிநேரம் தேவை பட்டதாகவும் அதற்கு அடுத்த போட்டியில் கலந்து கொள்ள பார்படாஸ் செல்லும் போது 6மணிநேரம் விமான நிலையத்தில் இருந்ததாகவும், இதனை புகார் செய்த போதிலும் சரியான நடவடிக்கை எடுப்பதில் மந்தமான நிலைமை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியான தகவல்களே.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்த போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில் ” நாங்கள் விளையாடியதிலேயே மிகச்சிறந்த மைதானங்களில் இதுவும் ஓன்று. நாங்கள் இங்கு மீண்டும் விளையாட வரும்போது வெஸ்ட் இண்டீஸ் இங்குள்ள நிலைமைகள் சரியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். மைதானங்களுக்கு பயணம் நேரத்தி சரியாக நிர்வகிப்பது போன்றவற்றில் கடந்த தொடரிலும் எங்களுக்கு சில சிக்கல் உருவாகின.
வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகமானது இதனை கண்டுகொண்டு இந்த பிரச்சனைகளையும் நேரத்தை நிர்வகிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்களுக்கு ஆடம்பரத்தை கேட்கவில்லை எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அடிப்படையான சில விஷயங்களை தான் கேட்கிறோம். இதனை தவிர்ந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், இது ரோஹித் ஷர்மாவுக்கான கோப்பை என்றார் ஹர்திக் பாண்டியா.