முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்..இதற்கு விளக்கம் தர தேவையில்லை – தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல

By ·

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் சுப்மன் கில் 9 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய 17/2 என்ற தடுமாற்று துவக்கத்தை பெற்றது. ஆனாலும் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும் சிறப்பாக செயல்பாட்டு இந்தியாவிற்கு நல்ல ஸ்கோரை கொண்டுவர முயற்சி செய்தார்கள். இருந்த போதிலும் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடி துவக்கிய கெய்ல் மேயர்ஸ் 10 (6) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் வழக்கம் போல சரமாரியாக அடித்து நொறுக்கினார். ப்ரெண்டன் கிங் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85* (55) ரன்களும் ஷாய் ஹோப் 22* (13) ரன்களும் எடுத்ததால் 18 ஓவரிலேயே 171 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் “சில நேரங்களில் தோல்வியை தழுவது நல்லது. இது போன்ற சூழ்நிலைகளில் விளையாடுவது நமக்கு நாமே சவால் விடுவோம் என்று நம்புகிறேன். நாங்கள் சிறப்பாக வர முயற்சிக்கிறோம். பின்னோக்கிப் பார்த்தால் பரவாயில்லை. இதற்கு நாங்கள் அதிகம் விளக்க தர வேண்டியதில்லை. அணியில் உள்ள இளம் வீரர்கள் எப்படி விளையாடினார்கள் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

வரும் காலங்களில் நீங்களால் மீண்டும் சவால்களை எதிர்த்து சிறப்பாக வர முடியும் என்று நம்புகிறேன்.நாங்கள் விளையாடும் போது 10 ஓவர்களுக்குப் பிறகு அந்த பந்துகளை விளையாட அதிக நேரம் எடுத்துக்கொண்டோம். நான் வந்த போது அதிக பந்துகளையும், அதிக நேர்த்தியும் எடுத்து கொண்டதால் சரியாக ரன்களை எடுக்க முடியவில்லை இது அணியின் ரன் எடுக்கும் நேரத்தை பாதித்தது. அதற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஒரு அணியாக நாம் நம்மை நாமே சவால் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் “வெஸ்ட் இண்டீஸ் அணியானது சிறப்பாக விளையாடியது. அவர்களுடன் ஒவ்வொரு முறை விளையாடும் போதும் புதிய புதிய திட்டங்களுடன் அவர்கள் சவால்களை எங்களுக்கு கொடுத்தனர். இந்த தொடரில் இருந்து பலவற்றை கற்றுக்கொன்றோம். எதிர்காலத்தில் இந்த தவறுகளை திருத்தி கொள்ள நிறைய கால அவகாசம் இருக்கிறது என்றார் ஹர்திக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை