என்ன நடந்தாலும் திட்டத்தை மாற்ற போவதில்லை – வெற்றிக்கு பிறகு ஹர்திக் பாண்டியா நம்பிக்கை.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியானது இன்று பிராவிடன்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி 17.5 ஓவர்களிலேயே வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் “அடுத்த மூன்று போட்டிகள் மிகவும் த்ரில்லிங்காக இருக்கப்போகிறது என்று நாங்கள் பேசிக் கொண்டோம். இரண்டு தோல்வியோ அல்லது அல்லது இரண்டு வெற்றியோ எங்களின் நீண்டகால திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. நாங்கள் கட்டாயம் வெற்றியடைய வேண்டிய போட்டிகளில் தயாராக இருக்கிறோம்ர என்பதை இந்த போட்டியின் மூலம் காண்பித்துள்ளதாக நாங்கள் நினைக்கிறேன்.
இநிக்கோலஸ் பூரான் விரைவாக பேட்டிங் செய்ய வராதது எங்களது வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்காமல் இருக்க முடிந்தது. அதன் காரணமாக அக்சர் படேல் போன்ற ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தி விட்டேம். பூரன் ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்றால் என்னுடைய பந்துவீச்சை அடிக்கட்டும் என்பதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது. இது மாதிரியாக சவால்களை நான் மிகவும் என்ஜாய் செய்கிறேன்.
எனக்கு தெரியும் நான் பேசுவதை அவர் கேட்டுக்கொண்டு அடுத்த நான்காவது போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைக்கிறேன். ஒரு அணியாக இந்த போட்டியில் ஏழு பேட்டர்களுடன் தான் இந்த இலக்கை துரத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் பொறுப்புகளை எடுத்து கொண்டோம். இன்று நடந்தது போல் பேட்டார்கள் ரன்களை விளாசினால் உங்களுக்கு 8 வது இடத்தில பேட்டர் தேவைப்பட மாட்டார்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள் மேலும் அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. இது போன்ற போட்டிகளில் சூரியகுமார் விளையாடும் விதம் தான் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்றார் ஹர்திக் பாண்டியா