இந்த சீசனில் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை – மனதில் இருந்ததை போட்டுடைத்த ஹர்திக் பாண்டியா.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், பிளே ஆஃப் செல்லவும் அணிகள் எவை என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு போட்டியிடும் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் நேற்று ஈடன் கார்ட்டனில் மோதியது. இந்த போட்டியில்

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், பிளே ஆஃப் செல்லவும் அணிகள் எவை என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு போட்டியிடும் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் நேற்று ஈடன் கார்ட்டனில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற மும்பை அணி பந்துவீசி முடிவு செய்தது. ஏனென்றால் அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் இண்டாவதாக விளையாடும் அணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்று நினைத்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியானது 16 ஓவர்கலகக்குறைக்கப்பட முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கத்திலேயே பில் சால்ட் விக்கெட் விழுந்தது. அதனை தொடந்து நரேன் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதனால் மும்பை அணிக்கு உத்வேகம் கிடைத்தது.4வது ஓவரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் விழுக கொல்கத்தா அணி தடுமாறியது. இருந்த போதிலும் நிலையாக நின்று விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 20 பந்துகளில் 42 ரன்களுக்கு ஆட்டமிழதார்.

இவர்களை தொடந்து பின்னர் வந்த கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் சொலிக்காத நிலையில் கொல்கத்தா அணி 1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளில் இழந்து 157 ரன்களை அடித்தது. இதனை தொடந்து களமிறங்கிய மும்பை அணி பவர் பிளே ஓவர்களில் அற்பதமாக விளையாடியது. இதனை பார்த்த பலரும் மும்பை அணி தான் வெற்றிபெறும் என்று நினைத்தனர். ஆனால் அதிர்ச்சியே இஷான் கிஷான் ஆட்டமிழந்த பிறகுதான் தொடர்ந்தது.

இஷானை தொடடர்ந்து ரோஹித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் 11 ரன்களிலும் கேட்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க போட்டி தலைகீழாக மாறியது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்மே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பை அணியின் இந்த தோல்விக்கு முக்கியமான காரணம் முமபை அணியின் நடு பேட்ஸ்மேன்கள் சொதப்பியதுதான்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் : எங்களுடைய அணி ஒரு பேட்டிங் யூனிட்டாக அடித்தளம் இருந்தது, ஆனால் அதன் பிறகு எங்களால் அதனை பயன்படுத்தி லாபம் ஈட்ட முடியவில்லை மற்றும் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. விக்கெட் கொஞ்சம் மேலேயும் கீழேயும் இருந்தது மற்றும் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. எனவே வேகம் மிகவும் முக்கியமானது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டதைக் கருதி, நிபந்தனைகளின் அடிப்படையில் இதனை நாங்கள் சமாளிக்க முடியும் என்று நினைத்தோம்.

ஆடுகளத்தில் எல்லையில் இருந்து திரும்பிய ஒவ்வொரு பந்தும் ஈரமாகவே வந்தது. பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை.எடுப்பதை உறுதி செய்தனர். அடுத்த ஆட்டத்திற்காக் எண்ணம் ஒன்றுமில்லை, நம்மால் முடிந்தவரை சென்று ரசித்து, நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதுதான் ஆரம்பம் முதலே எனது குறிக்கோள். இந்த சீசனில் நாங்கள் போதுமான நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று நினைக்கிறேன் என்றார் ஹர்திக் பாண்டியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை