ஐபிஎல் போட்டியில் தன்னுடைய முதல் 100 பதிவு செய்த புரூக் – இந்த போட்டியிலாவது வெல்வார்களா SRH?

ஐபிஎல் 2023தொடரின் இன் 19வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவுக்கு எதிராக ஹாரி புரூக் அதிரடியாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக அ

By ·

ஐபிஎல் 2023தொடரின் இன் 19வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவுக்கு எதிராக ஹாரி புரூக் அதிரடியாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக அவரை பாராட்டி வருகின்றனர்.

ஹைத்ராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அவர் முடிவு செய்தது சரியான விஷியம் இல்லை என்று பின்னர் தான் தெரிந்தது. ஏனென்றால் தொடக்கம் முதலே ஹைதராபாத் அணியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததது. கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களை பறக்க விட்டனர் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள்.

இந்நிலையில் கடந்த கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த புரூக், ஐபிஎல்லில் விளையாடுவதற்குத் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக ஹாரி புரூக் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதனை தொடந்து நீண்ட இன்னிங்ஸ் விளையாடி அணிக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீச்சளர்களை பார்க்கவிட்ட ப்ரூக் 55 பந்துகளில்100 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதுவே அவரின் முதல் ஐபிஎல் 100 என்று கூட கூறலாம். அதோடு கடந்த 3 போட்டிகளில் புரூக் 3 போட்டிகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இன்று அதிரடியாக ஆடி மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து இன்று 100 அடித்துள்ளார். இதன் மூலம் தன்னை ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்தவர்கள் மத்தியில் தான் யார் என்பதனை காட்டியுள்ளார். மேலும் இவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 229 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதலே சொதப்ப ஆரம்பித்தது. முதல் அவரை போட்ட புவனேஷ் குமார் 1 ரன்கள் மட்டுமே கொடுத்து முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து பல விக்கெட்டுகள் விழா ஆரம்பித்துள்ளது. இந்த செய்தியை எழுதும் வரையில் கொல்கத்தா அணி 9.4 ஓவர்கள் முடிவுக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை