மீண்டும் சொதப்பிய ஹாரி ப்ரூக் – ட்விட்டர் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 40 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் புள்ளி பட்டியலில் முறையே ஹைதராபாத் அணி 9 இடத்திலும் டெல்லி அணி

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் 40 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் புள்ளி பட்டியலில் முறையே ஹைதராபாத் அணி 9 இடத்திலும் டெல்லி அணி 10 இடத்திலும் இருந்து வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க அட்டகரரான மயங்க் அகர்வால் தடுமாறி வந்த நிலையில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் வந்த ராகுல் த்ரிபாதி 10 ரன்களிலே மிட்செல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, மறுபுறம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா அரை சதத்தை பூர்த்தி செய்து அற்புதமாக விளையாடி வந்தார். சன்ரைசஸ் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 83 ரன்களை குவித்து இருந்தனர். கேப்டன் மார்க்ரம் 8 ரன்களில் வெளியேற அதற்க்கு பின் வந்த ப்ரூக் ரன் ஏதும் வெளியேற அபிஷேக் ஷர்மாவும் 67 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அப்துல் சமத் மற்றும் க்ளாசென் இணைந்து அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தி வந்தனர். அப்துல் சமத்தால் நிலைத்து நிற்க முடியாமல் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சன்ரைசஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். இருப்பினும் க்ளாசென் தனது அதிரடி பாணியைவிடாமல் அணியின் ஸ்கோரை உயர்த்த, அவருடைய அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது.

இந்நிலையில் ஹைதராபாத் அணியால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 2 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சொல்லப்போனால் ஹாரி புரூக் ஒரு போட்டியில் மட்டுமே சரியாக விளையாடி 100 அடித்துள்ளார். ஹாரி புரூக் அவர் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக ஹாரி புரூக் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதனை தொடந்து புரூக் 55 பந்துகளில்100 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனால் அந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதின் போது இந்திய ரசிகர்கள் தன்னை விமர்சிப்பது குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் “நான் சரியாக செயல்பட்டேன் என்று பல இந்தியர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு என்னைத் திட்டினார்கள். இப்போது அவர்களுக்கு பதிலடி கொடுத்து வாயை முடியாது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். ஆனால் அந்த போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பிரகாசிக்காத ஹாரி ப்ரூக் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து திட்டி வருகின்றனர் .

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை