ஹர்ஷல் படேல் குறி தவறாமல் எறிந்தும் மன்கட் முறையில் ரன் அவுட் கொடுக்கப்படாதது ஏன்? – வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ vs பெங்களூரு போட்டி ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதனால் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்
ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ vs பெங்களூரு போட்டி ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதனால் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி முதலில் இருந்தே தடுமாறினார்கள். இதனால் இன்று ஆர்சிபி தான் வெற்றியடையும் என்றிருந்த நிலையில் 10 வது ஓவருக்கு பிறகு பெரிய அற்புதம் நடந்தது. லக்னோ அணியின் நட்சத்திர வீரரான நிக்கோலஸ் பூரான் 15 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதன் மூலம் தேவைபடும் ரன்களின் இருக்கும் பந்துகளை விட குறைவாக ஆனது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடைசி ஓவரில் 6 பந்துகளை வெறும் 6 ரன்கள் தான் தேவைபட்டது. ஆனால் லக்னோவிடம் தேவையான பந்துகள் இல்லை. ஆனால் பெங்களூரு அணி பௌலரும் பதர்ட்டத்தில் இருந்தார்கள். இந்நிலையில் கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் போட வந்தார். அவர் வீசிய இரண்டாவது பந்தில் மார்க்வுட் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் 19.4 ஓவரின் போது ரன்கள் சமமானது. இந்நிலையில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்றிருக்கும் போது 5 வது பந்தில் விக்கெட் விழுந்தது.
அப்படிப்பட்ட நிலையில் கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில் கடைசி பந்து நேரடியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தியிடம் சென்றது. ஆனால் தினேஷ் கார்த்திக் பர்ட்டத்தில் இருந்த்தினால் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவறிவிட்டார். இந்நிலையில் லக்னோ அணி பெங்களூரு அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி தங்களுடைய 3 வது வெற்றியை பதிவு செய்து ஐபிஎல் பட்டியலில் முதல் இடத்தில இருக்கிறது.
But Pappu can’t even Mankad saala 😂😂😂😂😂#LSGvRCB #IPL2023
— Kartik (@Mehan_kartik) April 10, 2023
Enjoy until the video gets taken down😂😂😂😂 pic.twitter.com/6mLAa0x7IG
ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்த கடைசிப் பந்தில், வெற்றிக்குத் தேவையான ரன்னை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று முனைப்புடன் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த ரவி பிஷ்னோய், பந்துவீசப்படும் முன்பே கிரீசை விட்டு வெளியேறிவிட்டார். இதனை முன்பே எதிர்பார்த்திருந்தது போல், ஹர்ஷல் படேல் பந்துவீசாமல் மன்கட் முறையில் ஸ்டம்புகளை பெயர்த்து அவரை அவுட் செய்ய முயன்றார்
இது நல்ல முயற்சியாக இருந்த போதிலும் பதற்றத்தில் அவர் ஸ்டம்புகளை பெயர்க்கத் தவறிவிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பந்தை தூக்கி எறிந்து அவர் ஸ்டம்புகளை சிதற விட்டாலும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். காரணம், முதல் முயற்சியில் அவர் ஸ்டம்புகளை தாக்கியிருந்தால் அது மன்கட் முறையில் அவுட்டாக அமைந்திருக்கும்.