டிஆர்எஸ் முறையில் இந்தியா ஏமாற்றுகிறது.. விசாரிக்கப்பட வேண்டும் – முன்னாள் பாக் வீரர் மீண்டும் குற்றச்சாட்டு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடத்தில் மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்று தகுதி வாய்ந்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய 49 வது சதத்தை விளாசி கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இதனை தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு பெரும் அதிர்ச்சியாக தொடக்கம் முதலே விக்கெட்டுகள் விழுந்தது. இந்தியாவின் அற்புதமான பந்துவீச்சின் காரணமாக 83 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாபிரிக்க அணி பெரும் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் திருப்பு முனையாக செயல்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணிக்கு ஸ்பெஷல் பந்தை ஐசிசி தருவதாக கூறிய ஹசன் ராஸா மீண்டும் ஒரு குற்றசாட்டை வைத்துள்ளார். அவர் கொடுத்த பேட்டியில் “ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிஆர்எஸ் எடுக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வான் டி டுசென் பேட்டராக இருந்தார், பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆனதும் மிடில் ஸ்டம்பைத் தாக்கியது. அது எப்படி சாத்தியம்? பந்து விழுந்த கோணத்தில் இருந்து வெளியே தானே செல்ல வேண்டும்.
பந்து வரிசையில் இருந்தது ஆனால் பந்து லெக் ஸ்டம்பை நோக்கி சென்றது. எல்லோரையும் போலவே நானும் என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். டிஆர்எஸ் முறைகேடாக இங்கு கையாளப்படுகிறது, அது தெளிவாகத் தெரியும் என்று குற்றம் சாட்டினார் ராசா.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “இது முதல் முறை அல்ல. பாகிஸ்தானுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான போட்டியில் ரிவியூ கடைசி விக்கெட் கூட தரவில்லை. அதற்காக அவர்கள் மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர்கள் தங்களுடைய உள்நாட்டில் நடக்கும் விஷயங்களை பயன்படுத்தி கொள்கின்றனர் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் ராசா.