ஹெட் இருக்கும் போது ஒரு ஓவருக்கு 5 ரன் எடுத்தா எப்படி? லக்னோ அணியை விமர்சித்த மேத்யூ ஹைடன்.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நடுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில நாட்கள் மட்மே அரையிறுதி போட்டிக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் ராஜிவ் காந்தி சரசவதேச மையதானத்தில் மோதியது. பல அணிகள் ஒரே புள்ளியில் இருப்பதினால் இந்த போட்டியி

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நடுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில நாட்கள் மட்மே அரையிறுதி போட்டிக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் ராஜிவ் காந்தி சரசவதேச மையதானத்தில் மோதியது. பல அணிகள் ஒரே புள்ளியில் இருப்பதினால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது எனப்து இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை வென்ற முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதை அடுத்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி பவர் பிளே ஓவரிலே முதல் விக்கெட்டை இழந்தது. இதனை தொடர்ந்து அதிரடி வீரரான மார்கஸ் ஸ்டோன்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர் பிளே ஓவரில் குறைவான ரன்களை அடித்தது லக்னோ அணி. மேலும் இதற்கு பிறகு ராகுல் 29 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி தடுமாறியது.

இதனை தொடர்ந்து லக்னோ அணிக்கு குறைவான ரன்கள் மட்டுமே கிடைத்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களில் இழந்த 165 ரன்களை மட்மே அடித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி முதல் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் அதற்கு பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அற்புதமாக விளையாடி லக்னோ அணியின் பந்துவீச்சை தொம்சம் செய்தனர்.

இதனால் ஹைதராபாத் அணி 9,4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் போட்டியை வென்றது ஹைதராபாத் அணி. இந்நிலையில் போட்டிக்கு முக்கியமான ஒரு காரணம் லக்னோ அணியின் பவர் பிளே தான். சொல்லப்போனால் லக்னோ அணி பலர் பிளே ஓவரில் 27 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் தான் லக்னோ அணிக்கு குறைவான ரன்கள் கிடைத்தது. இந்த நிலையில் வர்ணனையாளரான மேத்யூ ஹைடன் லக்னோ அணியை விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் :இது ஒரு ஓவர் விக்கெட்டுக்கு ஐந்து ரன்கள் அடிக்கும் படியான விளையாடி இல்லை. யாராவது இறங்கி ரன்களை அடிக்க வேண்டும். சொல்லப்போனால் லக்னோ அணி மிகவும் மெதுவான விளையாடிய பவர் பிளேவாக இது இருந்தது. அது இன்னிங்ஸை எங்கும் கொண்டு செல்லவில்லை. எதிரணி அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் போன்றவர்கள் இருக்கும்போது, ​​உங்கள் எண்ணம் 1 ஓவருக்கு 10 ரன்கள் என்று இருக்க வேண்டும். அதற்க மேலும் செல்ல வேண்டும். 160-170 ஒருபோதும் போதாது என்றார் மேத்யூ ஹைடன்.

மேலும் இந்த போட்டி குறித்து பேசிய மிட்செல் மெக்லெனகன் கூறுகையில் : இது அவர்களை போட்டியில் இருந்து வெளியேற்றும் ஒரு அடி என்று நினைக்கிறேன். இந்த தோல்வியில் இருந்து மீள அவர்கள் இனி மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள் என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லின் புதிய யுகத்தில் போட்டித்தன்மையுடன் இருக்கும் வகையில் அடுத்த ஆண்டு தங்கள் அணியை எப்படி கட்டமைக்கிறார்கள் என்பதுதான் ஆதாரமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் மிட்செல் மெக்லெனகன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை