100 டெஸ்டிற்கு மேலே ஆடிவிட்டார். அவரை இப்போது தனிமைப்படுத்துவது சரியல்ல – புஜாராவிற்கு தோள்கொடுக்கும் ஹர்பஜன் சிங்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியடைந்ததை அடுத்து ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியின் மீது பல விமர்சனகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்நிலையில் வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பல வடிவத் தொடரின் போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் அ
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியடைந்ததை அடுத்து ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியின் மீது பல விமர்சனகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்நிலையில் வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பல வடிவத் தொடரின் போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் அணியில் உள்ள சில மூத்த வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்படி இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இல்லாதவர் தான் புஜாரா. புஜாரா நடந்து முடிந்த உலகோப்பை டெஸ்ட் போட்டியில் இந்திய விளையாடிய முதல் இன்னிங்கில் 25 பந்துகளை 14 ரன்கள் மட்டுமே அடுத்து ஆட்டமிழந்தார். அதே போல இரண்டாவது இன்னிங்கிலும் மிகவும் மோசமான ஷூட்டை விளையாடி 47 பந்துகளை 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் தான் அவர் வரும் iND vs WI போட்டியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தான் புஜாரா இந்த வெஸ்ட் இண்டிஸ் தொடரில் இல்லாது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “புஜாரா இந்த போட்டியில் இல்லை என்று வருத்தமளிக்கிறது. அவர் இந்தியாவுக்கு ஒரு பெரிய வீரராக இருந்துள்ளார். அவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு மட்டுமே உள்ளது, கைவிடப்படவில்லை என்று நான் நம்புகிறோம். புஜாரா இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் முதுகெலும்பாக இருப்பவர். நீங்கள் அவரை வெளியேற்றினால் மாட்டும் என்ன நடந்துவிட போகிறது. மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்படவில்லை.
வீரர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கவனம் தான் கொடுக்க வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.மேலும் பேசிய அவர் “புஜாராவை ஒரு முக்கிய வீரராக நீங்கள் கருதவில்லை என்றால், அதன் படி மற்ற வீரர்களும் முக்கியம் கிடையாது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி கேள்விக்குறிகள் இருக்கக்கூடாது. இந்தியா ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது, இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டது என இந்தியா விளையாடிய எல்லா இடங்களிலும் புஜாராவின் பங்களிப்பு மகத்தானது.
ஆமாம் கடந்த 1 முதல் 1.5ல் அவர் மிகவும் சீராக செயல்படவில்லை, ஆனால் மற்ற பேட்டர்களையும் பாருங்கள். ஏறக்குறைய இதே போன்ற புள்ளிவிவரங்கள் தான் அவர்களுக்கும் இருக்கிறது. எனவே அவரை தனிமைப்படுத்துவது சரியல்ல என்று நான் நினைக்கிறன். அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் , எனவே வருக்கு மரியாதை தரவேண்டும். இந்த முடிவுக்கு முன்பு தேர்வாளர்களுக்கும் புஜாராவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்ததாக நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் திறன் அவரிடம் இன்னும் உள்ளது என்று மேலும் கூறினார் ஹர்பஜன் சிங்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சேதேஷ்வர் புஜாராவின் ரன்கள் என்பது கணிசமாகக் குறைந்துள்ளது. WTC 2021-2023 சுழற்சியில், சௌராஷ்டிரா பேட்டர் 17 போட்டிகளில் 928 ரன்களுடன் இந்தியாவின் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரராக முடித்தார். இருப்பினும் அவரது சராசரி மோசமான 32 ஆக இருந்தது என்பதும் குறிப்பிடதக்கது.