அவர் எதுக்கு டெஸ்ட் கேப்டன்சி?? அவரே சரியா விளையாடல. இது கோலியே பரவாயில்லை – பத்ரிநாத் சரமாரி கேள்வி

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே இருந்து இருக்கலாம் என்று முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். IND vs RSA முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்த

By ·

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே இருந்து இருக்கலாம் என்று முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். IND vs RSA முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாற வைத்தனர். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது.

இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 3 விக்கெட்டுகளையும் கோட்ஸி மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி இந்திய அணிக்கு 164 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.

அதாவது 2வது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக எல்கர் 185 ரன்களும் ஜான்சன் 84 ரன்களும் பெண்டிகம் 56 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

அதன் பின் இன்றைய நாளில் 3வது இன்னிங்க்ஸ் விளையாடிய இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக கோலி 76 கில் 26 ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பர்கர் 4 விக்கெட்டுகளையும் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் ராபடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் இந்திய வீரரும் தற்போது வர்ணனையாளருமான சுப்ரமணியம் பதிரிநாத் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி இருக்க வேண்டும். விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரிய வீரர். இந்தியாவுக்கு வெளியே ரோஹித் தன்னை ஒரு தொடக்க ஆட்டக்காரராக நிரூபிக்கவில்லை. அவர் ஏன் அங்கே இருக்கிறார்? என்றும் அவர் ரோஹித் ஷர்மாவை விளாசி இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை