இவர் இரண்டு உலகக்கோப்பை வெல்வதற்கு தகுதியான வீரர் தான் – ஸ்டூவர்ட் பிராட்.

இன்று நடைபெற உள்ள இந்திய மற்றும் ஆஸ்திரேலியா போட்டியை காண்பதற்கு நரேந்திர மோடி மைதானதிற்கு பல அரசியல் தலைவர்களும் பல நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் இன்று வருகை தரவுள்ளனர். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இன்று இந்தியாவில் நடைப

By ·

இன்று நடைபெற உள்ள இந்திய மற்றும் ஆஸ்திரேலியா போட்டியை காண்பதற்கு நரேந்திர மோடி மைதானதிற்கு பல அரசியல் தலைவர்களும் பல நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் இன்று வருகை தரவுள்ளனர். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இன்று இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது வரும் இன்று நடைபெற உள்ளது.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சில தினங்களுக்கு முன் நடந்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

அதாவது பவுலிங் பேட்டிங் மற்றும் பில்டிங் என மூன்று துறையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அணிக்கு அதிக அளவில் ரன்கள் குவித்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் 700 ரன்களை கடந்து விட்டார் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் 500 ரன்கள் அடித்திருக்கின்றார்கள். இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து எப்போதும் ஒரு விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது ஆனால் அதனை இந்திய அணி இந்த உலக கோப்பை போட்டியில் நிறைவு செய்து உள்ளது. கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இருவரும் இணைந்து அணிக்கு அற்புதமாக விளையாடி ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிக்கு ஒரு தூணாக இருக்கின்றார்கள். இந்த உலகக்கோப்பை தொடரிலும் ஒரு மிடில் ஆர்டரில் 500 ரன்கள் அடித்த வீரரும் ஷ்ரேயஸ் ஐயர் தான். ஜடேஜாவும் சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி உள்ளார்.

ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்கிறார். ஆகையால் தான் மிடில் ஆர்டர் வீரர்கள் பயம் இல்லாமல் சிறப்பாக விளையாடுகிறார்கள். இன்று நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியை பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்திய அணி அணி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் சிலவற்றைக் கருத்துக்களை பகிர்ந்துள்ளார் அவர் கூறுகையில் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தினால் அது வருங்கால தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் பவர்ஹவுஸ் ஆக மாறியிருக்கின்றது.

இதுவும் அப்படி செய்யும். இந்திய அணி சொந்த மைதானத்தில் விளையாடுவதால் அது மிகவும் வலிமையானதாக இருக்கும் இப்படிப்பட்ட இறுதிப் போட்டிகளை 100 முறைக்கு 95 முறைகள் இந்திய அணி தான் வெல்லும். ஒருநாள் போட்டிகளில் இரவு 50 சதங்களை எடுத்துள்ளார் விராட் கோலி. அவரை பொருத்தவரை அவர் தன்னுடைய நாட்டில் இரண்டு உலக கோப்பையை வெல்வதற்கு அவர் தகுதியான வீரர் தான். ஆனாலும் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய ஒரு அனைவருக்கும் என்றால் அது ஆஸ்திரேலியா அணியாக தான் இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு குறி வைப்பார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை