“ரவீந்திர ஜடேஜா ஒரு ராக் ஸ்டார்” என அந்த ஜாம்பவான் அப்போதே சொன்னார் – புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது நாளை இந்தியாவில் கோலாகலமாக தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக பல பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் அனைத்தும் சரியாக செல்வதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் கொடுத்த பே

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது நாளை இந்தியாவில் கோலாகலமாக தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக பல பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் அனைத்தும் சரியாக செல்வதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இந்திய அணியின் தேர்வும் பலருக்கும் திருப்தி அளிக்குமாறு இருக்கிறது.

இந்நிலையில் இந்த வருடம் நடக்கும் உலக கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர் என்றால் அது ஜடேஜா தான். அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது போலவே இந்த முறை உலக கோப்பையில் சில அதிசியங்களை செய்து இந்த அணி உலக கோப்பையை வெல்ல பெரும் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் குறித்தும் அவரை முதலில் சந்தித்தது குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறுகையில் ரவீந்திர ஜடேஜாவை நான் முதன்முதலில் பார்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் போட்டியின் போது தான். அவர்கள் டெல்லியில் விளையாட போராடினார்கள், அது முதல் ஐபிஎல் போட்டி. அவர்களது அணி எல்லாவிதமான பிரச்சனைகளிலும் இருந்தபோது ரவீந்திர ஜடேஜா 40 ரங்கள் என்ற ஒரு அழகான சிறிய ஆட்டத்தை விளையாடினார்.

அப்போது ​​தலைசிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவரான மறைந்த ஷேன் வார்ன் ரவீந்திர ஜடேஜா ஒரு ராக் ஸ்டார் என்று கூறினார். அப்போதுதான் நான் நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தேன், அவர் ஒரு ராக் ஸ்டார் என்பதை உணர்ந்தேன். ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சிஎஸ்கேக்காகச் செய்ததைப் போலவே, மக்கள் எதிர்பார்க்கும் போது அவர் எதையும் செய்யக்கூடியவர்.

தினேஷ் கார்த்திக் கூறியது போல இந்திய கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது ஜடேஜா ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து நம்பமுடியாத வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெற்று கொடுத்தார். அது இன்னமும் பலரது மனதில் நீங்காது இருந்து வருகிறது. மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் பேசுகையில் “ஜடேஜா மிகவும் பொருத்தமாக இருக்கிறார், அவர் மற்றொரு உலகக் கோப்பையை விளையாட தகுதியானவர்.

ஆனால் நான் வெளியே செல்லப் போகிறேன் என்பதை நினைத்து நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். அவர் தனது 30 வயதின் நடுப்பகுதியில் இருக்கிறார், மற்றொரு உலகக் கோப்பையை விளையாட நான்கு நீண்ட ஆண்டுகள் விளையாட வேண்டும். மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நேரத்தில். அவர் ஒரு ஆல்-ரவுண்டராக நிறைய சாதித்துள்ளார் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை