இவர் தான் இந்திய அணியின் அடுத்த ரோஹித் ஷர்மா. அது போல் தான் அவர் பேட்டிங் செய்து வருகிறார் – சஞ்சய் மஞ்சுரேக்கர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் ரோஹித் ஷர்மா போல் இந்திய அணிக்கு தொடக்கத்தை அளிக்கிறார் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் ரோஹித் ஷர்மா போல் இந்திய அணிக்கு தொடக்கத்தை அளிக்கிறார் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.
இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு தங்களது இடத்தை உறுதிப்படுத்திவருகின்றனர். இந்திய அணியில் ருதுராஜ், ஜெய்ஸ்வால், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ரின்கு சிங் சிறப்பாகவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். எனவே இவர்களுக்கு இன்று நடக்க வுள்ள போட்டியில் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு ஏற்பட்டுள்ளது. என்னெற்றால் முதல் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஜெயஸ்வால் குறித்து அவர் கூறுகையில், ரோஹித்தின் ஆக்ரோஷமான அணுகுமுறை அவருக்கு எல்லா மூலைகளிலிருந்தும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது, மேலும் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ஒரு நிபுணரும் வர்ணனையாளருமான தொப்பியை அணிந்திருக்கும் முன்னாள் இந்திய பேட்டர் சஞ்சய் மஞ்ச்ரேகர், இந்தியாவுக்கான டி20 போட்டிகளில் ரோஹித்தைப் போல் செயல்பட இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆதரித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2023 இன் 14 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால், ஜூலை 12 அன்று டொமினிகாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்காக தனது முதல் டெஸ்டில் அறிமுகமானார் மற்றும் முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, இளம் மும்பைகர் ஆகஸ்ட் 8 அன்று கயானாவில் தனது T20I அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 33.63 சராசரி மற்றும் 163.71 ஸ்ட்ரைக் ரேட்டில் 370 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.